ஐயக்கிய பேரவையே ! விளக்கம் தாருங்கள் ! posted bysalai_saleem@hotmail.com (Dubai)[01 April 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3705
அஸ்ஸலாமு அலைக்கும்..
ஒரு இயக்கம் எபோது ஐயக்கியம் என்று அறியப்படும் என்றால் அந்த பேரவையில் ஊரில் உள்ள எல்லா தரப்பினரின் பிரதிநிதித்துவம் இருக்கப்படும் போது மட்டும்தான். உங்களிடம் அது முதலில் இல்லையே? உங்களை யார் தெரிந்தெடுத்தார்கள்? நீங்களாக உங்களுக்கு முடி சூடிக்கொண்டு,
நான்தான் நிரந்தர தலைவன் என்று மார்தட்டிக்கொண்டு, தாங்களே இந்த ஊருக்கு நன்மையையும் செய்யாமல், செய்யும் நல்லவர்களையும் தரக்குறைவாக விமர்சிப்பது நாகரீகம் அல்ல. உங்களால் முடிந்தால் நல்லது செய்யுங்கள், இல்லாவிட்டால் நல்லது செய்பவர்களுக்கு வழி விட்டு விலகி இருங்கள்.
வேண்டாம் இந்த போலி கௌரவமும் தலைமைப்பதவி மோகமும். தயவுசெய்து ஊர் நலம் ஒன்றையே மைய்யக் கருத்தாக வைத்து எல்லா தரப்பினரின் ஒட்டுமொத ஆதரவை பெற முயற்சி பண்ணுங்கள்.
ஆமாம், உங்களைத்தான் கேட்கிறேன், நீங்கள் ஊர் நலனிற்கு செய்த நன்மைகளை பட்டியல் போட்டு காட்ட முடியுமா?
ஏன் இந்த பச்சை புழுகல் ? தேர்தல் புறக்கணிப்பை நாங்கள் ஆதரிக்கவே இல்லை என்று? நீங்கள் போட்ட தீர்மானம் நம்பர் 11இல் தெளிவாக இதே இணையதளத்தில் வந்துள்ளதே, என் அப்போதே இதை நீங்கள் எதிர்க்கவில்லை? நீங்கள் செய்யத்தவறிய கடமைகளை மறைப்பதற்காக தேர்தல்
புறக்கணிப்பு அது இது என்று எல்லா மக்களையும் அநியாயமாக கூட்டி ஒரு ஜோக்கு காட்டி விட்டீர்கள். என்ன நடந்தது அதற்கப்புறம்?
சரி, தேர்தலை புறக்கணிப்பது சட்டப் புறம்பு என்கிறீர்களே, இந்திய அரசியல் சட்டப்படி தானே 49 O போடா சொல்கிறது? அப்போது எலேகஷனை புறக்கணிப்பது எப்படி சட்டப்புரம்பாகும்? இந்த அடிப்படை சட்ட நுணுக்கம் தெரியதவர்கள ஐக்கிய பேரவை இல் இருக்கிறீர்கள்?
பேரவை இதுவரை சட்டபோர்வமாக பதிவு செய்யப்படவும் இல்லை. இதை வைத்து என்ன செய்யலாம் என்று நினைத்துகொண்டு இருக்கிறீர்கள்.
அப்போது போட்ட தீர்மானத்தை இல்லை என்பது, இப்போது போடாத தீர்மானங்களை போட்டதாக சொல்வது,
சகோதரர் S K ஸாலிஹ் தான் சொல்கிறாரே போடாத தீர்மானங்கள் எப்படி அறிக்கையை வெளியில் வந்தது? இதெல்லாம் நம்மையே நாம் ஏமற்றிக் கொள்வதுதானே? நாம் யாருக்காக இந்த வேடம் போடவேண்டும்?
சரி, ஊரில் உயிர் கொல்லியாம் கேன்சர் வியாதிக்கு ஊர் கூட்டம் போட்டீர்களே அதற்க்கு பிறகு என்ன நடந்து இருக்கிறது என்று ஊருக்குத்தான் கொஞ்சம் சொல்லுங்களேன்
ஊருக்கு எந்த விதத்திலும் நன்மைகளே செய்யாத "ஐக்கியம்" இருந்தென்ன இல்லாவிட்டாலும் என்ன?
நீங்கள் உண்மையிலேயே ஊருக்கு நன்மை செய்ய நினைத்தீர்களானால், பாகுபாடு இல்லது எல்லா தரப்பினரையும் உங்களோடு இணைத்துக்கொண்டு, இளைஞர் பட்டாளத்தை இயங்க வைத்து, அதற்க்கு பக்கபலமாய் நீங்கள் இருந்து அவர்கள் நல்லவைகளை செய்யும்போது தட்டிக்கொடுத்து, தீமையின்
பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல் அறிவுரைகள் கூறி ஊர் நலமே எல்லோரும் நலமும் என்று சிறப்பாக இயங்க சகோதரர் SK ஸாலிஹ் அவர்கள் தொகுத்து வழங்கி எல்லா மக்களின் ஆதரவை பெற்ற காயல் ஐக்கியப் பேரவை ஒரு தொலை நோக்குப் பார்வை என்ற ஒரு சீரிய செயலாக்கத் திட்டத்தை அமுல்படுத்தி, நாம் செய்யும் எல்லா நல்ல காரியங்களும் நமக்கு பயணிக்கும் வகையில் நாம் சிறப்புடன் செயல்பட்டு, நமது ஊரின்
மேம்பாட்டுக்கு நாம் எல்லோரும் உறுதுணையாக இருப்போமனில் அல்லாஹ்வும் அவன் அருளை நம் மீது எல்லையில்லாமல் பொலிவானகவும். ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross