உங்களின் வழிகாட்டல்கள் எங்களுக்கு தேவை posted byHusain Noorudeen pmhusain@gmail.com (Abu Dhabi)[01 April 2011] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3707
சாளை சலீம் காக்கா அவர்களின் கருத்தை நாங்கள் ஆமோதிக்கிறோம். ஐக்கிய பேரவையின் முக்கியஸ்தர்கள் அனுபவமிக்கவர்கள் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் உங்களுக்கு இருக்கும் கடப்பாடுகள் காரணமாகவோ, அல்லது வேறு சொந்த நலன்களுக்காகவோ ஊர் நலனை அடமானம் வைக்கவேண்டாம். உங்களின் அனுபவமிகுந்த வழிகாட்டல்கள் எங்களுக்கு கண்டிப்பாக தேவை. எனவே பெரியவர்களாகிய தாங்கள் ஆலோசகர்களாக மட்டும் இருந்து இளைஞர்கள் தலைமையில் இந்த பேரவை தொடர்ந்து நடக்கவேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் கற்ப்புடையார் வட்ட விஷயத்தில் காயல்பட்டணம்.காம் எந்தவித தவறையும் செய்திருப்பதாக நாங்கள் கருதவில்லை. அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு விஷயமாக கேட்டிருக்கும் இதே கேள்வியைத்தான் நாங்களும் சில முந்திய செய்திகளின் கமெண்ட் பகுதிகளில் பதிவு செய்திருந்தோம். எங்கள் உணர்வுக்கு மதிப்பில்லாமல் நீங்கள் தொடர்ந்து நமது வலைத்தளத்தின் மேல் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதாக இருந்தால், நாங்கள் அவர்களுடன் கூட்டு நிற்போம் என்பதை நீங்கள் மறந்து விடவேண்டாம்.
இது, காயல்பட்டணம்.காமிற்கு எங்களின் தெளிவான ஆதரவை நாங்கள் வெளிப்படுத்துவதாக மட்டும் நீங்கள் கருதுமாறு நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross