கோமான் ஜமாஅத் தலைவர் அவர்களின் பெயரிலான அறிக்கையைப் பார்க்கும் பல கேள்விகள் எழுவது மட்டுமல்ல; 2011 தேர்தலின்போது வெளிவந்த ஜமாஅத்
சார்பான அறிக்கையும் நினைவுக்கு வந்தது.
http://www.kayalpatnam.com/shownews.asp?id=7218
அந்த அறிக்கையையும், இந்த அறிக்கையையும் பார்க்கும்போது, வார்த்தைகளிலும் - விளக்கங்களிலும் பல வேறுபாடுகள் தெரிகின்றன.
தன் வேட்பாளரின் பெருமையைக் கூறாமல் - பிற வேட்பாளரின் குறைகளைக் கூட கூறாமல், பிற வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பவர் ஏன் இப்படி
உற்சாகமாக வாக்களிக்கிறார் என்று கேட்பது விநோதமாக இருக்கிறது.
2011 அறிக்கையில் கீழ்க்காணும் வாசகம் இருந்தது.
/*
எங்கள் 1 வது வார்டு வேட்பாளர் தேர்வில் நாங்கள் பின்பற்றிய வேட்பாளரின் தகுதிக்கான மதிப்பீட்டு அளவுகோள் விபரம்:
1. இபாதத், ஒழுக்கம்
2. நேர்மை, நாணயம்
3. பொருளாதாரம்
4. நன்னடத்தை, மக்களிடம் பழகும் தன்மை
5. கல்வி
6. அவரின் வாக்குறுதி
*/
இந்த அறிக்கை சகோதரர் லுக்மான் அவர்கள் தேர்வுக்கு பிறகு ஜமாஅத் வெளியிட்ட அறிக்கை.
இப்போது சகோதரர் அஸ்ரப் அவர்கள் தேர்வான பிறகு வெளியாகியுள்ள அறிக்கையை பாருங்கள். எவ்வளவு பெரிய மாற்றம்???
எனது சந்தேகம் - 2011இல் ஜமாஅத் சார்பாக கடைபிடிக்கப்பட்டதாகக் கூறிய அளவுகோள்கள் இவ்வாண்டும் கடைப்பிடிக்கப்பட்டதா?
இதை நான் ஏன் கேட்கிறேன் என்றால், ஜமாஅத் என்பது இறையில்லத்தை சுற்றி இயங்கும் அமானிதமான ஓர் அமைப்பு. அதன் பெயரில் நடக்கும் அனைத்தும், அந்த
ஜமாஅத் மக்கள் அனைவரின் பெயரிலும் நடப்பதற்கு சமம். அது மட்டுமல்ல, நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளரின் செயல்பாடுகளின் தாக்கம் உங்கள் வார்டோடு மட்டும் முடிவதில்லை. ஊருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
ஜமாஅத் வேட்பாளராகத் தேர்வான பிறகு லுக்மான் காக்கா, சில வாக்குறுதிகளை கொடுத்தார்.
/*
4) ஊர் விஷயத்தில் பொதுவான காரியங்களில் நம் ஜமாஅத்தின் ஆலோசனைப்படி செயல்படுவேன்
*/
இந்த வாக்குறுதிகள் தொடர்பாக எனது கேள்விகள்:-
(1) நகராட்சியின் பல கூட்டங்களில் இருந்து லுக்மான் காக்கா வெளிநடப்பு செய்தார்களே? அப்போது - ஜமாஅத்திற்கு தெரிவித்து, அனுமதி பெற்றாரா? அல்லது அந்தளவுக்கு அது பெரிய விஷயம் இல்லையா?
(2) நகர்மன்றத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கையெழுதிட்டாரே? அப்போதாவது ஜமாஅத்திடம் தெரிவித்து, அனுமதி பெற்றாரா?
அல்லது அதுவும் அந்தளவுக்கு பெரிய விஷயம் இல்லையா?
(3) சுயேட்சையாக வெற்றிப்பெற்று அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டாரே? அதையாவது ஜமாஅத்துக்கு தெரிவித்து, அனுமதி பெற்றாரா? அல்லது அதுவும் அந்தளவுக்கு பெரிய விஷயம் இல்லையா?
குறிப்பாக இதில மூன்றாவது விஷயத்தை பாருங்கள்! லுக்மான் காக்கா தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டது. இதில் ஜமாஅத் அனுமதி பெற்றாரா?
ஏன் இது முக்கியம் என்றால், உங்கள் அறிக்கையில - நீங்கள் சொல்லியிருக்கீங்க:-
/* சுயேட்சைகள் மட்டுமே போட்டி இடவேண்டிய இத்தேர்தலை, அரசியல் தேர்தல் களமாக ... */ CP
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross