Re:...நீதிக்கு தலை வணங்கு... posted bymackie noohuthambi (chennai)[07 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37643
நீதிக்கு தலை வணங்கு என்று தமிழில் சொல்வார்கள். நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சிக்கலாம் ஆனால் நீதிபதிகளை விமர்சிப்பது நாகரிகம் இல்லை.
சென்னையில் காலையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மிக அற்பமானவை, ஆத்திரமூட்டக் கூடியவை. ஜாமீன் கேட்பது மிக நயமாகவும் நாணயமாகவும் நீதிபதியின் உணர்வுகளை தட்டி எழுப்புவதாகவும் கேட்கவேண்டும். உணர்ச்சிகளை தூண்டக் கூடியாத அமையக் கூடாது. அதே சமயம் நீதிமன்றத்தில் வாதாடுவது மிகவும் நுட்பமாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும்.
வழக்கில் ஜெயலலிதா சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்களுக்கே புரியும். அதிமுக நண்பர்களுக்கு அவசரம் அதிகம். 18 வருடங்கள் ஆக்கப் பொறுத்தவர்கள் இப்போது மிக்க அவசரப் படுகிறார்களே என்று முதல் ஜாமீன் மனுவை முன் வைக்கும்போதே இவர்களை எச்சரிக்கை செய்தார். பவானி சிங் அவர்கள் நீதிபதியை கடுப்பேற்றி விட்டதையும் மறுக்க முடியாது. இவ்வளவு பெரிய மக்கள் சக்தியும் ஆதரவும் பெற்ற ஒரு முதலமைச்சரை ஜாமீனில் விட்டால் இந்த நாட்டை விட்டே ஓடிவிடுவார் என்பது எவ்வளவு அபத்தமான வாதம். கடைசியில் அவர் தடம் புரண்டது மன்னிக்க முடியாத குற்றம். இவரை இனிமேல் யாரும் வழக்கறிஞராக ஏற்றுக் கொள்வார்களா, அரசே அவரை டிஸ்மிஸ் செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
இன்றைய புதிய தலைமுறை "நேர் பட பேசு" விவாதத்தைக் கவனித்தவர்களுக்கு ஒரு செய்தி தெளிவாகிறது. உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதா அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தாலும். வழக்கு தொடர்ந்து கர்நாடகா நீதி மன்றத்தில்தான் நடக்கும். ஏனெனில் கர்நாடக நீதி மன்றத்துக்கு இந்த வழக்கை 2003 இல் மாற்றியதே உச்ச நீதி மன்றம்தான்.
எல்லா குற்றங்களுக்கும் நீதியின் கடைசி வாசல் உச்ச நீதிமன்றந்தான். அதை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு சாதகமானாலும் பாதகமானாலும் நாம் அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஜெயலலிதா அவர்களுக்கு இது நன்கு தெரியும். அவர் பொறுமையுடனும் தைரியத்துடனும் எதையும் எதிர் கொள்வார். ஆனால் அவரது கட்சி தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு பல தவறான போராட்டங்களிலும் சுவரொட்டி விளம்பரங்களிலும் ஈடு பட்டு பிரச்சினையை பூதாகாரமாக்கி விட்டார்கள். ஊழல் வழக்கு விஷயங்களில் உச்ச நீதி மன்றம் முன்னெப்போதையும் விட இப்போது சட்டங்களை - தீர்ப்புக்களை கடுமையாக்கி விட்டதால், இதற்கு பின்னர், ஊழல் வரிசையில் நிற்கும் தமிழக தலைவர்கள் எல்லோரும் இது போன்ற தீர்ப்புக்களை எதிர் நோக்கியே இருக்க வேண்டும்.
நமக்கு பிரியமானவர்கள் தண்டிக்கப் படும்போது நமக்கு மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும் என்ன செய்வது. தவறு செய்த உயர் குலப் பெண் - வசதி வாய்ப்பு மிக்க செல்வாக்கு உள்ள குடும்ப பின்னணி உள்ள பெண் திருடியபோது அந்த பெண்ணை விடுவிப்பதற்கு நபிகள் நாயகம் அவர்களிடம் நபி தோழர்கள் சிபாரிசு செய்த போக்கு முகம் கடுகடுத்த நபி அவர்கள், எனது மகள் பாத்திமா திருடியிருந்தாலும் இதே தண்டனைதான் கொடுத்திருப்பேன். உங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தினர் இப்படி ஏற்ற தாழ்வுகள் பார்த்து சட்டத்தை தங்கள் இஷ்டம்போல் வளைத்து தீர்ப்புக்கள் வழங்கியதால்தான் அவர்கள் மிக கேவலமாக அழிக்கப் பட்டார்கள் என்ற உண்மையை நபிகள் நாயகம் அவர்கள் தெளிவு படுத்தி சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்ற நிலைப்பாட்டை உறுதிப் படுத்தினார்கள்.
இங்கே ஊழல் செய்தவர்கள் நபி தோழர்களுமல்ல தீர்ப்பு வழங்குபவர்கள் நபிகள் நாயத்தின் வழியில் நடப்பவர்களும் அல்ல. இறுதி தீர்ப்பு நாள்தான் எல்லா நியாய அநியாயங்களுக்கும் உண்மையான தீர்ப்பு வழங்கும் நாளாக இருக்கும். அதுவரை சாட்சிகள் யார் பக்கம் சாதகமாக இருக்கிறதோ வாத பிரதிவாதங்களை யார் சமயோசிதமாக கெட்டி தனமாக வாதிடுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள்.
ஆட்சி அதிகாரங்களை அல்லாஹ் அவன் நாடியவர்களுக்கு கொடுக்கிறான். அவன் நாடியவர்களிடமிருந்து அவற்றை பிடுங்கி கொள்கிறான். இதற்கு கால எல்லை நேரம் பகல் இரவு என்றெல்லாம் கிடையாது என்பதை இப்போது உலகின் நாலா பக்கங்களிலும் நடக்கும் திடீர் புரட்சிகள் மூலம் அவதானிக்க முடிகிறது. நம்மால் முடிந்த வரை நேர்மையாக நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எல்லோரும் முயற்சி செய்வோம். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross