செய்தி: கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்! சுமார் 100 பயனாளிகள் பயன் பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...உயர்ந்த உள்ளங்கள்..சிறந்த சேவைகள் posted bymackie noohuthambi (chennai)[16 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37774
புற்று நோய் பரிசோதனை இலவச முகாமை திறம்பட நடத்தி முடித்தவர்கள், அதற்கான களப் பணி ஆற்றியவர்கள், பொருளாதாரத்தை அள்ளி வழங்கிய காயல் நல மன்றங்கள் மருத்துவர்கள் எல்லோரும் நம் உள்ளங்களில் உயர்ந்து நிற்கிறார்கள். யாரும் எதுவும் சொல்வார்களோ என்ற அச்சம் நீங்கி தங்களை பரிசோதனை செய்துகொள்ள சென்றவர்கள் எல்லோருக்கும் அல்லாஹ் பூரண உடல் நலத்தை வழங்குவானாக. ஆரோக்கியமாக இருப்பதை விட நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்ற உள்ளுணர்வே முக்கியம். அதற்கு இந்த இலவச முகாம் நல்ல வடிகால் அமைத்துக் கொடுத்துள்ளது.
நோய் நாடி நோய் முதல் நாடி...என்று வள்ளுவம் சொல்கிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அல்லாஹ்விடம் நாம் செல்வ வளத்தை வேண்டுவதைவிட உடல் நலத்தை அதிகம் கேட்க வேண்டும். ஒரு நோயாளியை நோய் விசாரிக்க சென்று அவருக்கு ஆறுதல் சொல்பவருக்கு பல்லாயிரக் கணக்கான மலக்குகள் துணை நிற்பதாக நபிகள் நாயகம் சொல்வதாக புகாரி ஷரீபிலும் இதர நூல்களிலும் நிறைய அறிவிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்த அரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் கலந்து கொண்டவர்கள் எல்லோருக்கும் அல்லாஹ்வின் அருள் மழை சூழ்ந்து நிற்கும் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது. அது எப்போதுமே பிறருக்கு உதவி செய்யவே துடித்துக் கொண்டிருக்கும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நம் எல்லோருக்கும் நோயில்லா வாழ்வையும் குறை இல்லா செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணங்களையும் எல்லாம் தந்தருள்வானாக என்று பிரார்த்திக்கிறேன். அல்லாஹ் கபூல் செய்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross