Re:...பள்ளிக்கூடம் முதல் பல்கலை கழகம் வரை.. posted bymackie noohuthambi (chennai)[16 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37775
மதரசாக்களுக்கு போன பிறகுதான் ஞானம் வந்தது ஒரு காலத்தில். ஆனால் இப்போது பள்ளிக் கூடங்களே பல்கலைக் கழகங்களாக மாறி வரும் காட்சியை பார்க்கிறோம். இளம் சிறுசுகள் இன்று இந்த மகதப் தோற்றத்தால் புது எழுச்சி பெறுகிறார்கள். சுபுஹ் தொழுகையை ஜமாத்துடன் தொழுகிறார்கள். பள்ளிக் கூட படிப்பு பாதிக்காமல் 60 நிமிட பாட திட்டம் எல்லா இடங்களிலும் ஒரு அற்புத சமுதாய மாற்றத்தை சத்தமில்லாமல் செய்து வருகிறது. காலை மாலை துஆக்கள் அவர்கள் கேட்கும்போது அவர்கள் பெற்றோர் காதுகளில் அது தேனாக இனிக்கிறது.
சினிமா பாடல்களுக்கும் கொட்டு குழல்களுக்கும் பின்னால் போய்க் கொண்டிருந்த இளவல்களை இசைக் கருவிகள் இல்லாத இஸ்லாமிய இன்னிசை பைதுக்களுடன் நடை போட வைத்த பெருமை ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனத்துக்கு உண்டு. ஹாபில்களை உருவாக்கி ஊர்வலம் சென்று ஊர் மக்களெல்லாம் என் மகனும் ஹாபிலாக வேண்டும் என்ற வேட்கையை பெற்றோர்கள் மனங்களில் கொழுந்து விட்டு எரிய செய்தவர்களும் அவர்களே.
இப்போது, மக்தப்களை ஆரம்பித்து, தொலைக் காட்சிகளுக்கும் சின்ன திரைகளுக்கும் முன்னால் உட்கார்ந்து தங்கள் பொழுதுகளை கழிக்க ஆரம்பித்த இளவல்களை மீட்டெடுத்து மக்தப் என்ற அறிவகத்தில் மார்க்க விஷயங்கள் குர் ஆன் ஓதும் முறைகள், தொழுகை இபாததுக்களில் உள்ள இன்பங்கள் இவற்றின்பால் ஈர்க்க செய்துள்ளவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். இதற்கு முதன் முதலாக காய் நகர்த்தியவர்கள் மொகுதூம் ஜும்மா பள்ளி ஜமாத்தார்கள். ஊர் முழுவதும் பரவலாக இந்த மக்தப்கள் ஆரம்பிக்கப் படுவது ஒரு நல்ல அறிகுறி. சமுதாயத்தில் ஓர் பெரிய அமைதிப் புரட்சி நடக்க ஆரம்பித்திருக்கிறது. அல்லாஹ் இந்த மக்தபை கபூல் செய்வானாக.
பெரியவர், தள்ளாத வயதிலும் சுறுசுறுப்புக்கு - காலம் தவறாமைக்கு - குடும்ப ஒற்றுமைக்கு - ஒரு தலைமைக்கு கட்டுப் படவேண்டும் என்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்தி - தொழில் புரட்சி மட்டுமல்ல சமுதாய நல்லிணக்க புரட்சியையும் ஏற்படுத்தி நமக்கு வழி காட்டி சென்றுள்ள பாதுல் அஸ்ஹாப் ஹாஜி அவர்கள் குடும்பத்தினர் இந்த மக்தபின் தலைவராக இன்னொரு பாதுல் அஸ்ஹாப் ஹாஜி ஆலிம் அவர்களை தேர்ந்தெடுத்து இருப்பது மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. பள்ளிக் கூடம் முதல் பல்கலைக் கழகம் வரை சென்றாலும் இந்த இளவல்கள் மார்க்கப் பற்றுடன் இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல முன்மாதிரி..
LA QADH KAANA LAKUM FEE RASOOLILLAHI USWATHUN HASANAA......அல்லாஹ் கபூல் செய்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross