Re:...மிகவும் சுறுசுறுப்பான ஊர் posted bymackie noohuthambi (chennai)[23 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37871
IT நிறுவனங்கள் நிறைந்த ஊர் என்று கேள்விப் பட்டு நான் அங்கு கடந்த வாரம் சென்றிருந்தேன். மிகவும் சுறுசுறுப்பான ஊர். குளிரூட்டப்பட்ட நகர்.
மர்ஹூம் ஆடிட்டர் புஹாரி ஹாஜி அவர்கள் நமதூர் மக்களுக்காக இரண்டு மாடி கட்டிடத்தை கொடுத்திருப்பதை பார்த்தும் கேட்டும் அவர்கள் பெயரால் இயங்கி வரும் புகாரி மத்ரசாவையும் பார்வை இட்டு அந்த மத்ரசாவுடன் இணைந்துள்ள பள்ளிவாசலில் தொழுதும் அங்கு பொறுப்பில் உள்ள அபூபக்கர் ஆலிம் அவர்களுடனும் மர்ஹூம் புகாரி ஹாஜி அவர்களின் துணைவியாருடன் கொஞ்ச நேரம் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. அல்ஹம்து லில்லாஹ்.
சதகதுன் ஜாரியா எனபது எவ்வளவு பெரிய காரியம். தற்போது நாட்டில் விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறி, பணம் பணம் என்று ஏகமாய் மக்கள் அலையும் காலத்தில், நமதூர் மக்களின் படிப்புக்காக, வேலை வாய்ப்புக்காக வருபவர்களுக்கு இப்படி ஒரு இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அல்லாஹ்விடம் எவ்வளவு நன்மைகளை அவர்கள் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டேன்.
பணம் இருக்கிறவர்களா கொடுக்கிறார்கள் - இல்லை மனம் இருப்பவர்களே கொடுக்கிறார்கள்.
மர்ஹூம் அவர்களின் மக்களும் இந்த கைங்கரியத்தை தொடர்ந்து செய்து வருவது மன நிறைவை தருகிறது . நீல சந்த்ரா என்ற அந்த இடம் தான் முகம் சுளிக்க வைக்கிறது. நமதூர் மக்கள் டில்லியில் வசித்தாலும், கல்கத்தாவில் வசித்தாலும்.மும்பை சென்னை ஜெய்பூர் எங்கு வசித்தாலும் இப்படி ஜன நெருக்கமான இடங்களில்தான் இருக்கிறார்கள். என்றாலும்
"முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை - சிப்பிக்குள்ளே இருப்பதனாலே முத்துக்கு என்ன சிறுமை" என்பது போல் எங்கிருந்தாலும் நல்ல இஸ்ஸத்தோடு வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கும் உள்ளம் உள்ளவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை அந்த குறைகளை மறக்க செய்கிறது. அங்கு தங்கி இருக்கும் மாணவர்கள் அந்த அறைகளை தங்கள் வீடுகள்போல் சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை என்ற மன நெருடலும் எனக்கு ஏற்பட்டது.
காயல் நல மன்ற நண்பர்களை சந்திக்க முடியவில்லை. அவர்கள் வேலை நேரங்களும் வேலை பளுவும் அவர்கள் இருக்கும் தூரங்களும் அதிகம். மெட்ரோ ரயில் பயணம். MG ரோடு, சேனல் 5 மாடியில் தொழுகை நகர் வலம் எல்லாம் 2 நாட்களுக்குள் முடித்துக் கொண்டு திரும்ப வேண்டிய கட்டாயம். சகோதரர் அப்துல்லாஹ், ஷைகனா மஹ்லரி ஆகியவர்கள் மட்டும் இரவில் எங்களை தேடி வந்து பார்த்து விட்டு சென்றார்கள்.
காயல் நல மன்றம் இப்போது விடுதிக் கட்டணத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பது எனக்கென்னவோ உடன்பாடு இல்லை. இலவசங்கள், விலையில்லா பொருட்கள் வழங்கியே இந்த நாட்டு மக்கள் வாழ்வின் பெறுமதி தெரியாமல் காலத்தை கடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த விடுதியில் தங்கி படிப்பவர்கள், வேலை தேடுபவர்களின் அன்றாட நடவடிக்கை பற்றிய அறிக்கை தினசரி இந்த மன்ற உறுப்பினர் யாருக்காவது ஒருவருக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்ற ஒரு விதிமுறையையும் ஏற்படுத்தினால் நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து.
சாப்ட்வேர் ஜாம்பவான் பில் கேட்ஸ் ஒரு நாளில் பலகோடி சம்பாதிக்கிறார். அவர் சொல்கிறார் என் மக்களுக்கு எந்த சொத்தும் நான் எழுதி வைக்கவில்லை. ஆனால் அவர்கள் எவ்வளவு படிக்க வேண்டுமோ அவ்வளவும் படிக்கட்டும் அதற்காக நான் செலவு செய்கிறேன். அவர்கள் தனியாக முயற்சித்து வேலை தேடி சம்பாத்தியம் பண்ணட்டும். அப்பாவுக்குதான் சொத்து சுகம் இருக்கிறதே என்று அவர்கள் சொகுசாய் வாழ நான் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்கிறார். இதையும் மன்றத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் எல்லோராது உயர்ந்த எண்ணங்களுக்கும் சேவைக்கும் நல்ல கூலியை தருவானாக ஆமீன்.
நாம் பாடுபட்டு சேர்த்த பொருளைக் கொடுக்கும்போதும் இன்பம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross