செய்தி: கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியருக்கு இக்ராஃவில் நேர்காணல்! நடப்பாண்டில் மொத்தம் 67 மாணவ-மாணவியரின் விண்ணப்பங்கள் ஏற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...எங்கே பணம் வந்து குவிகிறதோ அங்கே பொறுப்பும் அதிகரிக்கிறது... posted bymackie noohuthambi (chennai)[24 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37872
எங்கே பணம் வந்து குவிகிறதோ அங்கே பொறுப்பும் அதிகரிக்கிறது. ஏனெனில் அங்கு கணக்கு கேட்பதும் அதிகமாகிறது.
இக்ராவின் செயல்பாடுகள் - நம்பகத் தன்மை - அவர்கள் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்திருப்பதும், அதை பொதுக் குழுவில் செயற்குழுவில் சமர்ப்பித்து உறுப்பினர்களின் ஒப்புதலை வாங்குவதும், சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதும், நல்ல யோசனைகளை ஏற்றுக் கொள்வதும், குறைகள் சுட்டிக் காட்டப்பட்டால் அவற்றை மீளாய்வு செய்வதும் - இப்படி எல்லா அம்சங்களுமே சிறப்பாக நடந்து வருவதை நான் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டபோது அவதானித்தேன். இப்படி எல்லா இயக்கங்களும் இயங்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன்.
உலமாக்கள் ஒரு செய்தியை சொல்லிக் காட்டுகிறார்கள் . அல்லாஹ்வினால் பெரிய அரசாட்சியை கொடுக்கப்பட்ட சுலைமான் நபியவர்கள் ஆட்சி அதிகாரத்தை அல்லாவுக்கு பயந்து அவன் சொல்லியபடி ஆட்சி புரிந்தார்கள் என்றாலும் அவர்கள் நபிமார்களில் கடைசியாக சுவர்க்கம் செல்வார்களாம். காரணம் அல்லாஹ்விடம் அவர்கள் கணக்கு கொடுத்து விட்டு வருவதற்கு அவ்வளவு விஷயம் இருந்திருக்கிறது.
நபி தோழர்களில் அபரிமிதமான செல்வம் வழங்கப் பட்டவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவப் அவர்கள். அல்லாஹ்வின் பாதையிலேயே அவ்வளவையும் செலவு செய்தவர்கள். அவர்கள் நபி தோழர்களில் கடைசியாக சுவர்க்கம் செல்வார்களாம். காரணம் அல்லாஹ்விடம் அவர்கள் கணக்கு கொடுத்துவிட்டு வருவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருந்திருக்கிறது.
அப்படியானால் சாதரணமான நாம் எம்மாத்திரம். அல்லாஹ் நம்மை பாது காப்பானாக . நமது நல்ல செயல்களை ஏற்றுக் கொள்வானாக. இந்த பணியில் தங்களை இனைதுக்கொண்டாவர்கள், இந்த கல்வி சேவைக்காக உதவுபவார்கள் எல்லோருடைய செயல்களையும் கபூல் செய்வானாக. இவர்கள் எல்லோருக்கும் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் நீடித்த ஆயுளையும் கொடுத்தருள்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross