Re:...ஊக்கப் பரிசு posted bymackie noohuthmbi (kayalpaattinam)[09 November 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38072
நகர்மன்றம் செய்ய வேண்டிய சேவையை கலங்கரை விளக்கம் மகளிர் அணி தாங்களே முன் வந்து செய்வது பாராட்டுக்குரியது. இவர்கள் சேவையை பயன்படுத்திக் கொள்வதுடன் அந்த அணியினரின் செலவினங்களுக்கு நகர் மன்றம் முன்வந்து ஒரு ஊக்கத் தொகையை வாரா வாரம் அவர்களுக்கு வழங்கி அவர்களை உற்சாகப் படுத்தலாம்.
நமது பிரதமரின் கனவை நனவாக்கும் இந்த அணிக்கு நமது பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள். புகைப் படத்துக்காக போஸ் கொடுத்து நாளிதழில் பெரிய செய்தியாக துப்புரவு பணி இப்போது வெளிவருவது ஒரு பேஷன் ஆக மாறி வருகிற இந்த கால கட்டத்தில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எந்த கைம்மாறும் பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் இவர்கள் துப்புரவு பணியில் இறங்கி இருக்கிறார்கள். இவர்களை நல்ல விதம் பயன்படுத்திக் கொள்வதும் அவர்களை ஊக்கப் படுத்துவதும் காயல்பட்டின மக்களின் தார்மீக கடமையாகும்.
CHARITY BEGINS AT HOME - CLEANLINESS IS NEXT TO GODLINESS என்பவை ஆங்கில பழமொழிகள். நம் வீட்டிலிருந்தே இந்த தூய்மை பாரதம் என்ற கோஷம் வெளிப்பட வேண்டும். தினசரி விடிந்தவுடன் பிள்ளைகளுக்கு ஓதிக் கொடுப்பதுபோல் - படித்துக் கொடுப்பதுபோல் இந்த தூய்மையின் அவசியம் பற்றியும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதித்தால், அவர்கள் வளர்ந்து வரும் போது அதே சுற்றுப் புற சூழலை பாதுகாப்பார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross