நீடித்த நன்மைகளுக்குச் சொந்தக்காரர்! posted byS.K.Salih (Kayalpatnam)[13 November 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38149
நமதூர் கடற்கரைக்கு வருவோர், கடலில் உளூ செய்து, கடல் மணலில் துண்டை விரித்து, அவசர அவசரமாகத் தொழுவதுதான் வாடிக்கையாக இருந்தது. கடலில் உளூ செய்ய விரும்பாதோர், தொழுகை நேரம் தவறிவிடக் கூடாது என்று கருதி, மிகக் குறைந்த நேரம் மட்டுமே கடற்கரையில் அமர்ந்திருந்த நிலையில் அவசர அவசரமாக பள்ளிவாசலை நோக்கி ஓடும் நிலையிருந்தது.
அக்குறை போக்கப்பட்டு, கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் திருப்திகரமாக தொழுது செல்ல, குருவித்துறைப் பள்ளிக்குச் சொந்தமான - கடற்கரையையொட்டிய இடத்தை - பள்ளியின் முறையான அனுமதியைப் பெற்று, தொழுமிடமாக ஆக்கித் தந்த முதன்மைக் குழுவினருள் இப்றாஹீம் மாமாவும் ஒருவர். தொழுமிட பராமரிப்பிற்காக வசூல் செய்யப்பட்ட தொகைகளையும் அவர் தன் பொறுப்பிலேயே பாதுகாத்து வந்தார்.
‘வழமை போல’ பாழாய்ப்போன நோய் மாமா அவர்களையும் தாக்கவே, தொழுமிடத்தைப் பராமரித்து வந்த பெரியவர்களை கடந்த சில நாட்களுக்கு முன் அழைத்து, தன் கைவசமிருந்த தொகையை முறைப்படி ஒப்படைத்துவிட்டார்.
குறைவாகப் பேசுபவர். ஆனால் மிகுந்த பாசமுடையவர். அவர் கோபப்பட்டுப் பேசி நானறிந்ததில்லை. நன்மையான காரியங்களில் தன்னாலியன்ற அளவுக்கு முன்னணியில் நின்றவர்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் இப்றாஹீம் மாமா அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் மருமகனார் - என் பாசத்திற்குரிய சகோதரர் மு.த.ஜெய்னுத்தீன் அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை ஈந்தருள்வானாக...
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross