1982- ல் நான் பம்பாயில் இருந்த போது அறிமுகமான மதிப்பிற்குரிய அருமை உடன் பிறவா சகோதரர் வா.வு. புகாரி அவர்களும், நானும் அரபு தேசம் வருவதற்காக நாங்கள் Telephone/Telex operator, institute - ல் பயின்று வந்ததுடன், பல ஏஜென்டிடம் அலைந்தோம். அதன் பின் நான் டெஹ்ரானிர்க்கும், அவர் ரியாதிற்கும் சென்று விட்டாலும் எங்கள் நட்பு தொடர்ந்தது. அதன் பிறகு 10 வருடங்களுக்கு பின் அவருடன் சிங்கப்பூர் மற்றும் பாங்காக் சென்று வரும் வாய்பையும் பெற்றேன்.
இனிமையாக பழகும் நல்ல பண்பாளர். செய்த காரியத்தை நடத்தி முடிப்பார். தம்பி எஸ்.கே.சாலிஹ் குறிப்பிட்டது போல், பல நல்ல காரியங்களை மவுனமாக செய்து முடித்திருக்கிறார்.
நான் ஊர் வரும் பொழுதெல்லாம் என்னையும் வறியவர் வீட்டிற்க்கு அழைத்து சென்று அவ்வீட்டு தேவை அறிந்து உடன் அங்கு வைத்து மனு எழுதி ஜமாஅத் கை எழுத்தும் வாங்கி என்னிடம் தந்து அனுப்பி "வீட்டு நிலைமையை பார்த்து விட்டிங்க மன்றத்தில் எடுத்து சொல்லி உடன் உதவி செய்யுங்க" என்று தன் சொந்த சகோதரிக்கு கேட்பது போல் விரும்பி கேட்டுக்கொள்வார். அதன் படி மன்றத்தால் அவர் மனு மூலம் நிறைய ஏழைகள் பயன் பெற்றனர்.
அது மற்றுமா, என் குடும்பத்தில் ஒருவனாக தன்னை இணைத்துக் கொண்டு, என் மாமா (மர்ஹூம்) பாளையம் அஹமது சுலைமான் அவர்கள் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிய நேரத்தில் எங்களோடு கடைசி வரை, இருந்து நல்லடக்கம் செய்யும் வரை ஒன்றாக உறுதுணையாக இருந்து எங்களுக்கு ஆறுதல் தந்தவர்.
சிலோன் அகதியாக வந்து எங்கள் குடும்பத்து உறுப்பினர்களாக பழகிய அந்த அகதி குடும்பத்திற்கு ஓடோடி வந்து பல முறை, பலரிடம் பெற்று உதவி செய்தவர். அவர்கள் மீண்டும் சிலோன் செல்ல வழி வகை செய்தவர். அவர்களுக்கு இந்த தகவலை சொன்னதும் தன் சொந்த சகோதரனை இழந்தது போல் பதறி துடித்தார்கள்.
என் வீட்டிற்க்கு வந்து மனு எழுதும் பழக்கம் கொண்டவர் எங்கள் சுற்று வட்டாரத்திற்க்கே உதவியாக இருந்தவர். இன்னும் எத்தனையோ அடுக்கலாம், அப்படி பட்ட நல்ல மனம் படைத்த, தயாள குணம் கொண்டவர். எங்கள் அம்பலமரைக்காயர் தெருவை சார்ந்த சகோதரர் இன்று நம்முடன் இல்லையே என்று நினைக்கும் போது எங்கள் இதயம் விம்முகின்றது.
என்ன செய்வது? இறைவனின் கட்டளைக்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆக வேண்டும், என சபூர் செய்து கொண்டோம். இது போல் குடும்பத்து உறுப்பினர்களும், சபூர் எனும் பொறுமையை கடை பிடித்து மர்ஹூம் அவர்களுக்காக துஆ இறைஞ்சுவமாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகள் அனைத்தையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் அழகிய பூங்காவனத்தில் இடம் அளித்து நல்லடியார்களுடன் அமர வைப்பானாக! ஆமீன்.!!
குடும்பத்தினர் யாவருக்கும் எங்களின் நற்சலாம்.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....
மறக்க இயலா மனதுடன்...
அப்துல்காதர் S.H. மற்றும் குடும்பத்தார்
அல்-நயீம், ஜித்தா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross