செய்தி: நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நவ. 22 அன்று அனைத்துக் கட்சிகள் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byஎஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி (காயல்பட்டணம்)[21 November 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38206
இச்செய்தியில் கருத்து பதிந்தவர்களுக்கான விளக்கம்.
22-11-2014 சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. எவரையும் கண்டிக்கும் போராட்டம் என்று அறிவிக்கப்படவில்லை.
இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னர் நடைபெறும் ஆலோசனைக் கூடங்களில் பலரும் தங்களுக்குள்ள கருத்துகளை வெளிப்படுத்துவார்கள். அது தவிர்க்க முடியாதவை. அவ்விசயத்தில் நாம் யாருக்கும் தடைபோட முடியாது. ஆனால் கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் எவ்வாறு அமைகிறது என்பதைதான் பார்க்கவேண்டும்.
நகராட்சியும் வருவாய் துறை உள்ளிட்ட அரசு துறைகளும் இன்னும் அதிக கவனம் செலுத்தி வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதும் தொலைநோக்கு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்பதும், அதற்கு அத்துறைகளின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பது மட்டுமே இந்த ஆர்[ப்பாட்டத்தின் நோக்கமாகும்.
நகரமன்றத் தலைவியை இதற்கு முன்னர் பல்வேறு கூட்டங்களுக்கு நாங்கள் அழைத்தும் அலட்சிய படுத்தியே வந்துள்ளார். மேலும் முஸ்லிம் லீக் சார்பில் குடிநீர் சம்பந்தமாக நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது நிகழ்விடத்திற்க்கே வந்து ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியாக விளக்கம் அளிக்கும் பிரசுரம் என்ற பெயரில் அவ்விடத்தில் வினியோகித்து பிரச்சனையை உருவாக்கினார். ஆக எங்களை தொடர்ந்து அலட்சிய படுத்துவதால் தான் இந்த கூட்டத்தில் அவர் அழைக்கப்படவில்லை.
வெள்ள நிவாரன பணியில் நகராட்சின் நிலைகுறித்து அறிந்து கொள்வதற்காக நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்தோம் அவ்வளவுதான் அதற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
அண்மையில் நமதூரில் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட இரு சாராரும் உட்கார்ந்து பேசி அமைதியான சூழ்நிலை உருவாகி சுமூகமான முடிவு கண்ட பிறகு அதை மறந்து விடுவதுதான் விவேகமானதாகும். அதை விடுத்து அவரை அழைக்கலாமா ? இவரை அழைக்கலாமா ? என்று கேட்பது அறிவுடைமை ஆகாது ! வேண்டுமானல் பிரச்சனையை திசை திருப்பவும், சிலரை வம்புக்கு இழுத்து குளிர்காயவும் உதவுமே தவிர வேறு எதற்க்கும் பயன்படாது.
காயிதே மில்லத், சிராஜுல் மில்லத் போன்ற தலைவர்களையும் இழுத்து தேவையில்லாமல் கிண்டல் செய்து கருத்துக்களை எழுதுவது பண்பல்ல. யாரையும் திருப்தி படுத்த ஆலோசனை கூட்டமோ ஆர்ப்பாட்டமோ நடைபெறவில்லை. இறைவனின் திருப்பொருத்தம் ஒன்றை நாடியே இவைகளை நாங்கள் செய்கிறோம். இன்ஷா அல்லாஹ் இனியும் செய்வோம்.
மேலும் நிவாரண பணிகளில் இறங்குவதுதான் புத்திசாலித்தனம் என்பன போன்ற கருத்துக்களை பதிவோருக்கு எங்களது விளக்கம் என்னவென்றால்.
நிவரான பணிகளை மேலும் முடிக்கி விடத்தான் இந்த ஆர்ப்பாட்டம் பொது கூட்டம் போடலாம் என்று கருத்து தெரிவிப்பவர். ஆர்ப்பாட்டம் நடத்தி கவண ஈர்ப்பு நடைவடிக்கை மேற்கொண்டால் எப்படி தவறு காண்கிறார் என்று புரியவில்லை.
ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இவர்கள் ஆழமாக படித்தால் எங்கள் நோக்கத்தை புரிந்து கொள்வார்கள்.
இவண்,
எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி,
மாநில துணைச் செயலாளர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross