ஊர் நலன் நாடும் உன்னத குணம்!!.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[01 January 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38690
சில வீட்டு பந்தல்களால் மட்டுமல்ல பல மாதங்கள் நடக்கும் பல நிகழ்ச்சிகளாலும் (விவரிக்க விரும்பவில்லை) பல விதத்திலும் பாதிப்புக்குள்ளாகிறோம்.
வீட்டில் வயது முதிர்ந்த முதியோர்கள்,நோயாளிகள்,பள்ளி மாணாக்கள், படுத்துறங்கும் பச்சிளம் குழந்தைகள் வரை ஒலிபெருக்கி வதைப்பிலிருந்தும், வீத்யில் உண்டாகும் இரைச்சல், கரைசல்களாலும் எந்த அளவிற்கு தொந்தரவுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் மௌனமாக மனம் நொந்து வாழ்ந்து கொண்டிருக்க்றோம் என்பதை விவரிக்க வார்தைகள் இல்லை.
இது இந்த ஊரின் காலத்தின் கட்டாயமோ அல்லது கலாச்சாரத்தின் கெடுபிடியின் கட்டாயமோ தெரியவில்லை!
பந்தல் போடக்கூடாது என்ற நோக்கில் இந்த இணையதளத்தாரின் செய்தியுள்ளதாக நான் நினைக்கவில்லை, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போட்டால் நல்லதல்லவா,பொதுமக்களும் முணு,முணுத்துக்கொண்டு போகிறார்களே என்கின்ற எதார்த்தத்தை முன்னிலைபடுத்தி இருப்பதாகத்தான் நான் எண்ணுகிறேன்!
வீத்யில் அமைக்கும் கல்யாணப்பந்தலை ஒரு சிறிய இடைவெளியிட்டு இரு சக்கர வாகனம் செல்லும் அளவிற்கு அமைத்து நிகழ்ச்சி முடிந்தவுடன் உடனே அவிழ்த்து போக்குவரத்திற்கு உதவி செய்தால் நல்லது!
விருந்து போன்ற சமயங்களில் ஒருசில மணித்துளிகள் ரோட்டை அடைப்பது தவிர்க்க முடியாததுதான்,அதை பொது மக்களும் நமதூர் வடிவமைப்பை புரிந்து கொண்டவர்களாகவும்,அந்த வீட்டு கல்யாண நிகழ்வுக்கு நாமும் சற்று ஒத்துழைப்போம் என்ற பெருந்தன்மையிலும் பொருத்து கொள்ளத்தான் வேண்டும்!
ஒரு உதாரண உண்மை நிகழ்வு:--என் நண்பன் வீட்டு திருமணம் மற்றும் விருந்து முடிய நடுஇரவு ஒருமணிக்கு மேலாகிவிட்டது (அ.ப.தெரு) தெருவை அடைத்து பந்தல் போடப்பட்டிருந்தது. திருமண நிகழ்வு எல்லாம் முடிந்தவுடன் என் நண்பன் வேலையாட்களை கூப்பிட்டு பந்தலை பிரிக்க சொன்னான்,மணி இரண்டுக்கு மேலாகி விட்டது காலையில் வந்து பிரிக்கிரோமே முதலாளி என்றார்கள்,இல்லை இல்லை உடனே பிரித்து விடுங்கள் காலையில் பள்ளிக்கூட வாகனம் இந்த வழியாகத்தான் செல்லவேண்டியுள்ளது, அப்பிள்ளைகள் போக கஷ்ட்டப்பட்டால் என் திருமண சந்தோசம் எல்லாமே பறிபோய்விடும்,நீங்கள் மாட்டேன் என்றால் நானேதான் செய்யவேண்டியது வரும் என்று சொன்னவுடன் அந்த வேலையாட்கள் வேலையில் இறங்கினார்கள்!
என் உற்ற நண்பனை ஒருமுறை ஏற இறங்க உற்று நோக்கினேன்,ஒருவேளை குடிநீருக்காக ஏங்கிய காலத்தில் எவரும் எதிர்பாரா வண்ணம் பல்லாயிரக்கணக்கான பெரிய தொகை பணதைகொடுத்து குடிநீர் தேக்கத்தொட்டி கட்ட உதவிய ஊர்நல வள்ளல் குடும்பத்தின் நேரடி வாரிசான என் நண்பனிடமும் ஊர் நலன் பேணும் ஒரு சில துளி கண்ணியக்குருதி குதித்தோடிக்கொண்டிருப்பதை
என் உணர்வலையால் உணர்ந்து உள்ளம் மகிழ்ந்தேன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross