சுறுசுறுப்பின் இலக்கணம்... posted byS.K.Salih (Kayalpatnam)[04 January 2015] IP: 116.*.*.* India | Comment Reference Number: 38736
காலமெல்லாம் ஊக்கம் - உற்சாகத்துடன் வாழ்ந்தவர்கள்... தனது பளுவான தேவைகளையும் கூட தானே நிறைவேற்றும் வழக்கம் உள்ளவர்கள்.
புதிதாக யாரைப் பார்த்தாலும் கூட பல்லாண்டு பழக்கப்பட்டவரைப் போல எளிதில் உரையாடி உறவு கொண்டாடுபவர்கள்.
மனமுவந்த உபசரிப்புகளுக்குச் சொந்தக்காரர்.
பொதுவாகவே, தன் வேலையைத் தானே செய்யும் - நடக்கவோ, ஓடவோ, உடல் உழைப்பைக் காண்பிக்கவோ சடைவடையாதவர்களை அல்லாஹ் கிடையில் கிடத்த மாட்டான் என்று எனக்கு அழுத்தமான எண்ணம் உள்ளது. அந்த எண்ணம் சரிதான் என்பதை - மாமா அவர்கள், என் தந்தை ஆகியோரின் வஃபாத் உணர்த்தியுள்ளது.
அதிகாலையில் தஹஜ்ஜுத் தொழுதுவிட்டு, ஃபஜ்ர் வேளையை எதிர்பார்த்து அமர்ந்திருந்த அவர்கள் - தன் உடல் வழமைக்கு மாற்றமாக வியர்ப்பதையும், உடலுக்குள் ஏதேதோ மாற்றம் நிகழ்வதையும் கருத்திற்கொண்டு - வீட்டிலிருந்த தன் மகளை உதவிக்கு அழைத்திருக்கிறார்கள். சில வினாடிகளில் மருத்துவமனைக்கு அவர்களைக் கொண்டு சென்றபோதே அல்லாஹ் அவர்களை அவதிப்படாமல் அழைத்துக்கொண்டான் என்பதை அவர்களின் மகனார் மஹ்மூத் நெய்னா காக்கா அவர்கள் கூறக்கேட்டேன்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் ஷாஹுல் ஹமீத் மாமா அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது மக்கள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை ஈந்தருள்வானாக...
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross