மக்கள் வரிப்பணம் மக்களுக்கே பயன்பெற வேண்டும் / தனியார்களுக்கு அல்ல...! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[19 January 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38974
நகரின் முக்கிய பெருந்தகை பொதுநல சேவகர் மர்ஹும் ஹாஜி எம்.கே.டி. அப்பா என பாசத்தோடு நாம் மற்றும் நகரின் அணைத்து சமூக மக்கள் அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் எம்.கே.டி. அபூபக்கர் அவர்கள் தலைமையிலான அப்போதைய பஞ்சாயத்து குப்பை கொட்ட தீர்மானம் நிறைவேற்றிய சர்வே எண் 392 / 5 - நிலம் ஏன் புறக்களிக்கப்பட்டு வருகிறது...? அதற்க்கான காரணங்கள் தான் என்ன...? தற்போது நன்கொடையாக பெறப்பட்ட நிலமான சர்வே எண் 278 க்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுவத்தின் நோக்கம் தான் என்ன..? இதில் ஏதோ மர்மமாகவே உள்ளது..
நகர்மக்கள் நலன் கருதி தொலைநோக்கு பார்வையுடன் சுயநலன் கருதாது நல்ல எண்ணத்துடன் 1958 இல் தீர்மானம் நிறைவேற்றிய பெருந்தகை மறைந்து 56 ஆண்டுகளாக அந்த தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
56 ஆண்டுகளுக்கு முன்பு குப்பைக்கொட்டவே ஒதுக்கிய சர்வே எண் 392 / 5 பெருந்தைகையின் தீர்மானம் நிறைவேற உறுப்பினர்கள் நல்ல எண்ணத்துடன் ஒரு மனதாக ஒத்துழைக்க வேண்டும் - மறைந்தும் இன்று நம் மனதில் வாழும் அந்த பெருந்தகைக்கு நாம் செய்யும் கடமையும் ஆகும்..
மக்கள் வரிப்பணம் மக்களுக்கே பயன்பெற வேண்டும் / தனியார்களுக்கு அல்ல...!
மக்கள் வரி பணம் சர்வே எண் 278 இல் சாலைகள் அமைக்கவும் / சுற்று சுவர் எழுப்பவும் அதனால் அப்பகுதியின் நில ஜவான்களின் நிலங்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பு ஏற வைத்து நில ஜவான்கள் ஆதாயம் அடையவும் நகர் மக்கள் வரி பணம் பல லட்சம் பலி கிடா ஆக வேண்டாம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross