கண்டிப்பு கலந்த அன்பாளர்! posted byS.K.Salih (Kayalpatnam)[23 January 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39029
பாசத்திற்குரிய பெரியப்பா அவர்களின் வஃபாத் செய்தியறிந்து மிகுந்த கவலையுற்றேன். இத்தனை நாட்கள் அவர்களைக் காண்ணாரக் கண்டு வந்த எனக்கு, எனது ஒரு வார கால வெளியூர்கள் பயணம் காரணமாக - அவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொள்ளும் பாக்கியம் கிடைக்காமல் போய்விட்டது.
கண்டிப்பு கலந்த தனது நடவடிக்கைகளால், குடும்பத்திற்கும் - சுற்றுவட்டாரத்தினருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கிய பெரியப்பா அவர்கள், பிற்காலத்தில் தனது பழைய பழக்கவழக்கங்களோடு (யாரையும் பாதிக்காத வகையில்) கேலி, கிண்டலடிக்கும் குணத்தையும் தன்னகத்தே முழுமையாகக் கொண்டிருந்தார்கள்.
ஒரு மனிதன் தனது அன்றாட வாழ்வை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த நடமாடும் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள்...
என் தந்தை வழி ஆண் உறவினர்களுள் மூத்தவராகத் திகழ்ந்து எங்கள் கண்களுக்கு விருந்தளித்த பெரியப்பா அவர்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி தனது மறுவுலக வாழ்வுக்குப் பயணப்பட்டுவிட்டார்கள்...
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
இச்செய்தியின் கீழ் கருத்து தெரிவித்துள்ள அனைவரது நற்சான்றிதழ்களையும் வஸீலாவாக்கி, அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறை, மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைப்பானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - என் பாசத்திற்குரிய மச்சான் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross