Re:...வரவேற்க வேண்டிய திட்டம் posted bymackie noohuthambi (colombo)[13 February 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 39243
ஒரு கழிப்பறை கட்ட சுமார் எவ்வளவு செலவாகும் என்ற தகவல் தெரிந்தால் ஊர் முழுக்க இந்த திட்டத்தை பைத்துல் மால் நிர்வாகமே அமுல் படுத்த முடியும். பணத்தை வைத்துக் கொண்டு உதவி செய்யக் காத்துக் கொண்டிருப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அந்த பணம் முறையாக செலவழிக்கப் படுகிறதா என்று தெரியாமல், தனியொருவர் அந்த வேலையை செய்து கொடுக்க முடியாமல் வெளி நாடுகளில் தொழிலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த செய்தி போய் சேர வேண்டும்.
தூய்மை இந்தியா என்ற மோடி மந்திரம் ஒரு அரசியல் தந்திரம். 1436 ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகமும் திருமறையும் வலியுறுத்தி வரும் இந்த சுத்தம் தூய்மை நமது வீட்டு கழிவறைகளையும் கட்டுப் படுத்தும். எனவே இந்த நல்ல முயற்சியை ஊர் முழுக்க விரிவாக்கம் செய்ய முயற்சி செய்யுங்கள். மக்கள் பணத்தை அள்ளி தர காத்திருக்கிறார்கள். கழிவறை இல்லாத வீடுகள் கட்டுவதற்கு நகர்மன்றம் பிளான் அங்கீகரிக்க கூடாது. ஏழை எளியவர்கள் வீடுகள் கட்டும்போதும் இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இலவசமாக கிடைக்கிறது என்பதால் இந்த திட்டத்தை பொது மக்கள் துஷ்ப்ரயோகம் செய்யவும் கூடாது.
எது எவ்வாறாயினும், மாற்றி யோசிக்கும் பைத்துல் மால் நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross