காயல்பட்டினத்தைச் சேர்ந்த 5 ஏழைகளின் வீடுகளுக்கு கழிவறை கட்டிக் கொடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் சார்பில் அதன் அலுவலக மாடியில், இம்மாதம் 04ஆம் நாள் புதன்கிழமையன்று 19.30 மணியளவில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பைத்துல்மால் பொருளாளர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில், நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் கிராஅத் ஓதினார். துணைத்தலைவர் டூட்டி எம்.எஸ்.எல்.சுஹ்ரவருதி, துணைச் செயலாளர் எஸ்.ஏ.ஜவாஹிர், அறங்காவலர்களான ஏ.எச்.நெய்னா ஸாஹிப், பீ.எம்.ஏ.ஹபீப் முஹம்மத், வி.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ, எஸ்.எம்.அஹ்மத் சுலைமான் ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
(1) ஸதக்கா, ஜக்காத் வருமானத்தை அதிகப்படுத்திட முயற்சிகள் மேற்கொள்ளவும், வீட்டுச் சந்தா செலுத்தி வருவோரிடம் தொகையை அதிகப்படுத்தக் கேட்டுக்கொள்வதென்றும், அதிக நன்கொடையாளர்களை வீட்டுச் சந்தா திட்டத்தில் சேர்த்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
(2) சொந்த வீடு இருந்து - கழிவறை வசதியில்லாத 5 ஏழை நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு புதிதாக கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்.எல்.ஷேக்னா லெப்பை துஆ இறைஞ்ச, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
விஸ்டம் பப்ளிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |