விஸ்டம் பப்ளிக் பள்ளியில், 01 முதல் 06ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு, காகிதக் கைவினைப் போட்டி, 13.01.2015 அன்று பள்ளி கேளரங்கில் நடைபெற்றது.
மாணவ-மாணவியரின் கற்பனை வளம், வடிவமைப்புக் கலை உட்பட, அவர்களுக்குள் புதைந்திருக்கும் ஆக்கத் திறனை வெளிக் கொணரும் நோக்குடன் நடத்தப்பட்ட இப்போட்டியில் பங்கேற்றோர் - பழைய செய்தித் தாள்கள், பழைய பத்திரிக்கைத் தாள்கள், ஒட்டுவதற்கான பசை, அட்டை ஆகியவற்றை மட்டும் போட்டியில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தனர். வெட்டுவதற்குக் கத்தி, கத்திரிக்கோல் கூட பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறாக, குறைந்த மூலப் பொருட்களைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் செய்யும் இப்போட்டியில், பள்ளி மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று தம் திறமைகளை வெளிப்படுத்தினர். காட்சிகள் வருமாறு:-
தகவல்:
S.I.புகாரீ
விஸ்டம் பப்ளிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |