இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை (IPP) காயல்பட்டினம் கிளை சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், இம்மாதம் 17ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று 19.00 மணியளவில், இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இக்கூட்டத்தில், மவ்லவீ அப்பாஸ் அலீ - “ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?” எனும் தலைப்பிலும், மவ்லவீ அப்துல் மஜீத் மஹ்ழரீ - “நபித்தோழர்களும், நாமும்” எனும் தலைப்பிலும் உரையாற்றவுள்ளனர்.
பெண்களுக்குத் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் கலந்து கொள்ளுமாறும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்த பிரசுரம்:-
|