எதிர்வரும் ப்ளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில், தூத்துக்குடி மாவட்ட மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்றிட வேண்டும் எனும் நோக்கில், சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு - கே பிள் டீவி அலைவரிசைகளில் பாடத்திட்டங்கள் ஒளிபரப்பப்படவுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் எதிர்வரும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கில், ஆங்கிலம், கணிதம், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் பாடங்களுக்கு அனுபவம் வாய்ந்த பாட ஆசிரியர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வீடியோ நிகழ்ச்சி (video programme) கீழ்க்கண்ட கால அட்டவணையின் படி அரசு கேபிள் தொலைக்காட்சி மற்றும் உள்ளுர் தொலைக்காட்சி நிலையங்கள் மூலம் ஒளிபரப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:-
தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் - ஏ.எம்.என். டி.வியிலும், கோவில்பட்டி பகுதிகளில் - வானவில் மற்றும் கிங்ஸ் டி.வி.யிலும் 13.02.2015 ஆங்கிலம், 14.02.2015 வரலாறு, 16.02.2015 பொருளியல், 17.02.2015 வணிகவியல், 19.02.2015 கணிதம் ஆகிய பாட திட்டங்கள் 19.30 முதல் 20.30 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும்.
தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் - ஏ.எம்.என். டி.வியிலும், கோவில்பட்டி பகுதிகளில் - வானவில் மற்றும் கிங்ஸ் டி.வியிலும் 23.02.2015 ஆங்கிலம், 24.02.2015 வரலாறு, 26.02.2015 பொருளியல் 27.02.2015 வணிகவியல், 28.02.2015 கணிதம் ஆகிய பாட திட்டங்கள்; 19.30 முதல் 20.30 வரை ஒளிபரப்பு செய்யப்படும்.
தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் - ஏ.எம்.என். டி.வியிலும், கோவில்பட்டி பகுதிகளில் வானவில் மற்றும் கிங்ஸ் டி.வியிலும் 07.03.2015 ஆங்கிலம், 14.03.2015 வரலாறு, 16.03.2015 பொருளியல் 25.03.2015 வணிகவியல், 28.03.2015 கணிதம் ஆகிய பாட திட்டங்கள் 19.30 முதல் 20.30 வரை ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்த வீடியோ நிகழ்ச்சிகள் அரசு கேபிள் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அரசு கேபிள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நேரம் குறித்த விபரங்களை அரசு கேபிளிலியே தெரிந்துகொள்ளும் வகையில் அட்டவணைகள் ஒளிபரப்பப்படுகின்றன.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் 12ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ-மாணவியர் அனைவரும் இவ்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |