Re:...காதலர் தினம் posted bymackie noohuthambi (colombo)[13 February 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 39244
"கண்ணின் கடைவிழியை காதலியர் காட்டி விட்டால்
மண்ணில் குமாரர்க்கு மாமலையும் ஓர் கடுகாகும்"
என்று தமிழில் ஒரு பாடல் உண்டு.
"பாதி நிலாவை விண்ணில் வைத்து
மீதி நிலாவை மண்ணில் வைத்து
மண்ணில் வைத்ததை பெண்ணில் வைத்தானோ
அவள் கண்ணில் வைத்தானோ"
என்று இன்னொரு பாடல்...
இப்படி பெண்களே ஆண்களின் நிம்மதிக்கும் நிம்மதியின்மைக்கும் காரணமாகி இருக்கிறார்கள். எல்லா விளம்பரங்களிலும் ஒரு பெண்ணின் படத்தை போட்டால்தான் அந்த பொருள் விற்பனையாகிறது.
காலம் கடந்த சிந்தனை. தமிழ்நாடு தவ்ஹீது இயக்காமானாலும் சுன்னத் ஜமாஅத் இயக்கமானாலும் பெண்களை திருமறை திருநபி சொல்படி வாழ வற்புறுத்தி இருந்தால் முஸ்லிம் பெண்கள் இந்த தினத்தை வெறுத்து இருப்பார்கள்.. இப்போதாவது புரிகிறதே, அல்ஹம்து லில்லாஹ்.
தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமல்ல எல்லா ஜமாத்களும் இந்த கேடு கேட்ட காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். யாருக்காகவோ யாரோ செத்துப் போன கதை இது. இந்த valentines day எப்படி வந்தது என்பதை இணையத்தளத்தில் valentines day என்று அழுத்தி பார்த்த போது புரிந்தது, இது ஒரு பித்தலாட்டக் கதை. நெட் உள்ளவர்கள் எல்லோரும் ஆண்களும் பெண்களும் இதை ஒரு முறை சொடுக்கி பாருங்கள். உண்மை புரியும்.
பெற்றோர் பிள்ளைகள் மீது காதல் கொள்வது, பெற்றோர் மீது பிள்ளைகள் காதல் கொள்வது, மனைவி மீது கணவனுக்கு காதல் கணவன் மீது மனைவிக்கு காதல் இவை எல்லாம் வரவேற்க வேண்டியவை. ஆனால் அதற்கென்று ஒரு தினம், விரசமான காட்சிகள் எல்லாம் தவிர்க்கப் பட வேண்டும். காதலர் தினம் கழிசடைகள் தினம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross