Re:... posted bynizam (india)[24 February 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 39343
கேட்கவே அதிர்திசியாக உள்ளது.நாம் நமக்குள்ளே கொள்கை கத்திரிக்காய் என்று பிரிவுபட்டு கிடக்கும் சூழ்நிலையில் இதை சாதகமாகி கொண்டு சமுக விரோத சக்திகள் தலை எடுத்துவிட்டனவோ என்ற ஐயப்பாடு. பேருந்து நிலையத்தில் சமூகவிரோதிகள் குடிகாரர்கள் தொல்லை என்று ஒரு கருத்து உள்ளதை இந்த சம்பவம் உறுதிபடுத்தி உள்ளது. காவல்துறை இந்த பேருந்து நிலையத்தை இருபத்து நாலு மணிநேர கண்காணிப்பில் கொண்டுவரவேண்டும்.
மற்றொரு கவலை ஒருவழிப்பாதை காரணமாக ஏராளமான நமதூர் கல்லூரி மாணவிகள் இந்த பேருந்து நிலையத்தை பயன்பருத்த வேண்டி உள்ளது நகராட்சி தலைவிக்கு பணிவான வேண்டுகோள். ஒருவழிப்பாதை ஆணையில் இருந்து பள்ளி கல்லூரி வாகனங்களுக்கு விதி விலக்கு அளித்தால் இந்த பேருந்துநிலையத்தை தவித்தது அவரவர் இருப்பிடங்களுக்கு அருகில் இருந்து செல்ல வசதியாக இருக்கும். ஒரு அனுபவசாலி என்ற முறையில் ஒன்றை சொல்ல விரும்பிகிறேன். இந்த விசயத்தில் தாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து விரும்பாத சம்பவம் (அல்லா பாதுகாப்பான்) நடந்தால் தாங்களும் பொருப்பாளியாவீர்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross