Re:...பெற்றோருக்கு பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்ற மக்கள் posted bymackie noohuthambi (colombo)[24 February 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 39355
பாசத்துக்குரிய கபீர் மாமா அவர்களின் வபாத் செய்தியில் ஒரு உண்மை புதைந்திருக்கிறது. அவர்கள் சுகமாக இருந்த காலமெல்லாம் தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார்கள். அவர்கள் தேர்ந்து எடுத்துக் கொண்ட பாதை மக்களை தொழுகையின் பால் அழைக்கும் தப்லீக் ஜமாஅத் பணிகளின் பாதை.
அவர்கள் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாக பல்லாண்டு காலம் இருந்தாலும் நம்மை அடையாளம் கண்டு கொள்வார்கள் நலம் விசாரிப்பார்கள். அல்லாஹ் திருமறையில் சொல்வதுபோல் "உங்கள் பெற்றோரில் ஒருவரோ இருவரோ முதுமை அடைந்து விட்டால அவர்களை சீ என்ற வார்த்தை சொல்லிக் கூட அழைத்து விடாதீர்கள்.
கருணை எனும் இறக்கை கொண்டு அவர்களை போர்த்தி அவர்களுடன் பணிவுடனும் பாசத்துடனும் நடந்து கொள்ளுங்கள்" என்ற கருத்துள்ள வசனங்களை தங்கள் சிரமேற்கொண்டு அவர்கள் மக்கள் மருமக்கள் அவர்களை நன்கு கவனித்தார்கள் என்பதை நான் அவர்கள் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் அவதானித்துள்ளேன். மர்ஹூம் அவர்களின் து ஆ இவர்களுக்கு என்றும் இருந்தது. அதே போல் மக்களும் அவர்களுக்காக து ஆ செய்யும் மக்களாக இருக்கிறார்கள். எல்லாக் குடும்பங்களிலும் இப்படி மக்கள் மருமக்கள் அமைவது இல்லை. இது அல்லாஹ்வின் பெரும் கருணை.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறையை சுவர்க்க பூஞ்சோலையாக ஆக்கி வைப்பானாக. அவர்கள் நல்லமல்களை பொருந்திக்கொள்வானாக. அவர்கள் பாவங்களை பொறுத்துக் கொள்வானாக. அவர்களுக்கு மேலான சொர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.
என்னதான் வயதானாலும் ஒரு தந்தையை இழப்பது என்பது மனதுக்கு தாங்க முடியாத ஒன்று என்பதை அவரவர்கள் தாய் தந்தை மரணிக்கும்போது உணரமுடிகிறது.அந்த வகையில் எங்கள் தந்தையின் இழப்பாகவே இதையும் நான் கருதுகிறேன். அவர்கள் குடும்பத்தினருக்கு எனது பொறுமையை உரித்தாக்குகிறேன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross