செய்தி: நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு! சமையல் ஏற்பாடுகளுடன் உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!! முழு அசைப்படப் பதிவுடன்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
"ஈகோ" என்ற இந்த இரு சொல் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே அகப்பட்டுக்கொண்டு அல்லல்படுகிறேது!
எம்முடைய "ஈகோ"வீரியத்திலும் வலுவிலும் கெட்டியானது அதனால் நான் இமியள்வுகூட இறங்கி வர மாட்டேன் என்று ஒரு சாராரும், நாங்கள் மட்டுமென்ன இளிச்சவாயர்களா இறங்கி வர, என்று இன்னொரு பிரிவினரும் பிடிவாதமாக தங்கள் தங்கள் திமிர் தனத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள்!
இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு பிரிவினர் சற்று மனமிரங்கி விட்டுக்கொடுக்க முன் வந்தாலும்,அவர்களை முடுக்கி விட்டுக்கொண்டிருக்கும் பின்பலத்தினர்கள், இமியளவும் இறங்கி விடாதீர்கள் எதை எதை எப்படி இயக்குவது என்பது எங்களுக்கு தெரியும்,எங்கள் கட்டளைப்படி பின்தொடர்ந்தால் போதும் என்பது இருபிரிவினருக்கும் போதிக்கப்படும் கட்டாய கட்டளைகளாகும்!
நாடகம் நன்றாக இருக்கவேண்டுமே அப்போதுதானே பல நாட்கள் பலர் ஆதரவோடு ஓடும் என்று அதில் நடிக்கும் நடிகர்கள் சிறிது காட்சியை மாற்றி நடிக்க முற்பட்டாலும் அந்த நாடக இயக்குனர்களின் கொடூரமான கடுமையான கட்டளையின் கீழ்படிதலுக்கு ஆளாகி அவர்களின் ஆணைகளை தலைவணங்கி ஏற்று தலையாட்டும் பொம்மைகளாகி விட்டனர்!
இந்த இழிநிலையான இழுபறிக்கு எல்லையே இல்லை.
இந்த நிலை இப்படியே நீடித்தால் ஒரு உச்சகட்ட நிலையில் கொடூரமடங்கிய கலவரமாகக்கூட மாறலாம்.அப்படி மாறினால் அந்த விளைவின் பாதிப்பு ,நம் காயலின் கண்ணிய காலாச்சாரத்திற்கு கூட களங்கம் ஏற்ப்பட வாய்ப்புண்டு கணநேரம் வெறியுணர்வுகூடி விலங்கின புத்தியாய் விட்டால் பஸ்ஸ்டாண்டு படு பயங்கர சம்பவம்போல் சம்பவித்துவிடுமோ என்று வெருண்டு கொண்டு இருக்கும் அளவிற்கு பல விபரீத வதந்திகள் உலா வந்துகொண்டிருக்கின்றன. அல்லாஹ் காப்பாற்றுவானாக !
எஞ்சி இருக்கும் நகராட்சி நாட்களையும் இதுபோன்ற கூட்டாஞ்ச்சோறு,கேலி,கூத்து கொண்ட்டாடங்களோடு கழியுங்கள் அதையும் வீணாய்ப்போன மக்களாகிய நாம் வேடிக்கையாக பார்க்க கூடிய பாக்கியசாலிகளாவோம்!
இப்பொழுது உறுப்பினர்களின் சுற்று முடிந்து விட்டது, அடுத்து ஊரின் நடு மையத்தில் தலைவி அவர்கள் அவரை எதிர்க்கும் உறுப்பினர்களை கண்டித்து உண்ணாவிரத்தை ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை!
அப்படி ஆரம்பித்தால் தயவு செய்து அந்த காலகட்டத்தில் வானவேடிக்கை சிலம்பாட்டம்,குத்தாட்டம்,கரகாட்டம் என்ற பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள், எங்களுக்கும் நேரம் நன்றாக கழியும்!
நகராட்சியிலிருந்து தான் ஒரு xxxx நடைபெற வில்லையே, வீட்டிலுள்ள பிள்ளைகளுக்காவது பொழுதுபோக்கு வேடிக்கை காட்டலாமே உங்களை தேர்ந்தெடுத்த வீணாய்ப்போன மக்களாகிய நாங்கள்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross