வெட்டியாக இருக்கவில்லை. posted byசாளை அப்துல் ரஸ்ஸாக் லுக்மான், (அபூதாபி)[15 March 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39623
சகோதரர் ஜாவித் நசீம், நான் எனது குடும்ப பெயருடன் என் வாப்பாவின் பெயரையும் இணைத்து எல்லோருக்கும் தெரியும்படி கருத்து பதிகிறேன். நீங்களும் உங்களை அடையாளப்படுத்துவீர்கள் என்று எதிர்பார்கிறேன்.
உங்களை போன்று, நான் ஒன்றும் வேலை வெட்டி இல்லாமல் ஜால்ரா தட்டிக்கொண்டு இருக்கவில்லை. தலைவிக்கு ஜால்ரா தட்டுவதர்கு என்றே இந்த இணையதளத்தில் ஒரு டீம் இருக்கிறது. எனக்கு நேரம் கிடைக்கும் போது, தகுந்த பதிலை கொடுப்பேன்.
"சுயநலம் பாராது உழைக்கும் ஒரு அமைப்பை, பொய்யர்கள் எனக் கூறுகிறார் (http://goo.gl/Hgp3WP)" (C&P). இப்போதும் சொல்கிறேன், MEGA, தலைவியின் ஜால்ரா அமைப்பே. தலைவியின் முகநூல் செய்தியை அப்படியே போட்டவர்கள், அதன் உண்மை தன்மையை, குற்றசாட்டப்பட்டவர்களின் தரப்பு செய்தியையும் போட்டிருந்தால், அவர்களின் நேர்மை தெரியும்.
அந்த அமைப்பு, இந்த மூன்றரை வருடங்களில் ஊருக்கு நன்மையான (தலைவிக்கு ஆதரவாக நோட்டிஸ் விட்டதை தவிர) காரியங்கள், போராட்டங்கள் செய்துள்ளதா? குறைந்தபட்சம், ஊருக்குள் பஸ் வராமல் இருப்பது பற்றி இப்போது தலைவி எடுத்திருக்கும் முயற்சியையாவது செய்ததா?
இந்த அமைப்பினரின் இந்த நிலம் பற்றிய 2013-ம் வருட நோட்டிசில், "DCW நச்சு ஆலையின் கழிவுகள் இந்த இடத்திற்கு அடுத்தாற்போல்தான் கடலில் கலக்கிறது.. அதனால் அந்த ஆலை, அந்த ஓடை கலக்க தான் (DCW) காரணமில்லை என்று சொல்லுமாம்" (C&P)
இன்னும் முழுவதுமாக ஆய்வு செய்து முடிக்கப் படவில்லையா? சரி, இந்த நிலம் கடலில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் இருக்குமா? ஆனால் DCW நச்சு ஆலை அதன் நச்சு அமிலங்களை எங்கிருந்து (எவ்வளவு தூரத்தில்) கலக்கிறது? அல்லது அந்த நச்சு ஆலை வெளியிடும் அமிலங்கள் எந்த இடத்தில் இருந்து நச்சுத்தன்மையாக மாறுகிறது? என்ற அனைத்து விபரங்கள் KEPA -விடம் ஆதாரத்தோடு இருக்கும்போது, MEGA -வின், அந்த ஆலை, அந்த ஓடை கலக்க தான் (DCW) காரணமில்லை என்று சொல்லுமாம்" என்று வாய் கூசாமல் சொன்னது?
இப்போதாவது அந்த அமைப்பினர், அந்த கருத்துக்கு பதில் சொல்வார்களா?
அடுத்து அந்த அமைப்பினரின் முந்தைய நோட்டிசில், MKT அப்பா அவர்கள் தலைவராக இருந்த போது, 1958 தீர்மானம் பற்றி குறிப்பிட்டிருந்தனர். "தீர்மானம் நிறைவேற்றியது , MKT அப்பா அவர்களின் முதல் ஆட்சி காலத்தில். அதன் பின்னர் MKT அப்பா அவர்கள் மேலும் 7 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்கள். அந்த 7 வருடங்களில் அவர்களே அந்த தீர்மானத்தை செயல்படுத்த முயற்சி எடுத்தது மாதிரி தெரியவில்லை.
இந்த 55 ஆண்டுகளில், அவர்களுக்கு பின்னால் வந்த, பாவலர் அப்பா, LK அப்பா உட்பட எந்த தலைவரும் முயற்சி எடுக்கவில்லை. ஏன் MKT அப்பா அவர்களின் மருமகள் (மகனின் மனைவி) நாச்சி தம்பி ராத்தா அவர்கள் தலைவியாக இருந்தபோது கூட அந்த முயற்சி எடுக்கப்படவில்லை. இதற்கும் இந்த, "சுயநலம் பாராது உழைக்கும்(?)" அமைப்பினர் பதில் சொல்வார்களா?
-அட்மின், இந்த தகவல்களை, "செய்திக்கு தொடர்பில்லாதது" என்று நீக்கி விடாதீர்கள். சகோதரர் நசீம், என்னை பற்றி சொன்னதற்கான பதில்கள்.
நான் பதில் தருவது இருக்கட்டும். இந்த இரு திட்டங்களும் (பயோ கேஸ் & குப்பை கொட்டும் திட்டம்) இந்த நகராட்சியின் எஞ்சிய காலத்தில் நிறைவேறுகிறதா? அல்லது நிதி அரசுக்கே திரும்பி செல்கிறதா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
என்னுடைய வேலைகளை விட்டு நீண்ட பதில் கொடுக்க வைத்த சகோதரருக்கு நன்றி!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross