ஜாவித் நஸீம் காக்கா அவர்கள் இதே இணையதளத்தின் துவக்க காலத்தில் ஒரு forumஇல் பார்வையாளர் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தவர். பல்வேறு செய்திகளில் இன்றளவும் கருத்துப் பதிவு செய்து வருபவர். இந்த விபரம் போதுமென்று நினைக்கிறேன்.
அது சரி... லுக்மான் காக்கா! ‘அபூரஹ்மத்’ என்ற பெயரில் கட்டுரையே எழுதினார்கள். ‘மனைவியின் மணாளன்’, ‘பூமிபுத்திரன்’ என்றெல்லாம் பெயர் (?) இட்டு கருத்துக்களெல்லாம் பதிந்தார்களே பலர்? அதன் கீழும், மேலும் பல கருத்துக்களை தாங்களும் பதிந்து வந்துள்ளீர்களே...? அப்போதெல்லாம் விபரம் கேட்கத் தோன்றவில்லையோ? எல்லோருக்கும் தெரிந்த இவரது பெயரில் மட்டும் சந்தேகம் வருவதன் காரணமென்னவோ? இத்தனைக்கும் காயல்பட்டணம்.காம் ஒரு கருத்தாளர் யார் என அறியாமல் கருத்துப்பதிவுக்கு அனுமதிப்பதும் இல்லையே...?
“அதன் உண்மை தன்மையை, குற்றசாட்டப்பட்டவர்களின் தரப்பு செய்தியையும் போட்டிருந்தால், அவர்களின் நேர்மை தெரியும்.” C&P
வேடிக்கையாக இருக்கிறதே தங்களின் எதிர்பார்ப்பு? MEGA நோட்டீஸ் என்ன பத்திரிக்கையா? இரு தரப்பு செய்திகளையும் போட???
“அந்த அமைப்பு, இந்த மூன்றரை வருடங்களில் ஊருக்கு நன்மையான (தலைவிக்கு ஆதரவாக நோட்டிஸ் விட்டதை தவிர) காரியங்கள், போராட்டங்கள் செய்துள்ளதா? குறைந்தபட்சம், ஊருக்குள் பஸ் வராமல் இருப்பது பற்றி இப்போது தலைவி எடுத்திருக்கும் முயற்சியையாவது செய்ததா?” C&P
>>> மக்களுக்கு நகராட்சி குறித்து ஏற்படுத்தும் விழிப்புணர்வு உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?
>>> RTI முயற்சி மூலம் நூற்றுக்கணக்கான பக்கங்களுக்கு ஆவணங்களைத் திரட்டி, அவற்றின் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது தங்களுக்கு தெரியவில்லையா? இப்புடி கண்ணை இறுக்க மூடிக்கிட்டிருந்தா, எங்கங்க தெரியப்போகுது...?
“இந்த நிலம் கடலில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் இருக்குமா?” C&P
இந்த அறிவுப்பூர்வமான (???) கேள்விக்கு உங்களுக்கு அப்போதே முகநூலில் பதில் கூறப்பட்டதே? அதற்குள்ளே மறந்துவிட்டீர்களா காக்கா...? இந்த நிலம் கடலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் என நீங்கள்தான் வாய் கூசாமல் பொய் சொல்கிறீர்கள். இந்த நிலத்தை (278) ஒட்டினார்போல் - கிழக்கில் கடல், வடக்கில் ஓடை. அதாவது மீட்டர் கணக்கு, கிலோ மீட்டர் கணக்கு அல்ல, ஒட்டி! ஒட்டி!! ஒட்டினார் போல!!! அதாவது 0 மீட்டர்!!!! இப்போ என் காக்காக்கு புரிஞ்சிருக்கும்.
“ஆனால் DCW நச்சு ஆலை அதன் நச்சு அமிலங்களை எங்கிருந்து (எவ்வளவு தூரத்தில்) கலக்கிறது? அல்லது அந்த நச்சு ஆலை வெளியிடும் அமிலங்கள் எந்த இடத்தில் இருந்து நச்சுத்தன்மையாக மாறுகிறது?” C&P
என்னங்க கேள்வி இது? கழிவு தொழிற்சாலையில் உருவாகிறது. அங்கிருந்து ஓடை வழியாக கடலில் சேர்கிறது. எத்தனை செயற்கைகோள் படம் மூலம் விளக்கினாலும், விளங்காது போல் இருக்கிறது. எங்களுக்கு சந்தேகமில்லை. ஒருவேளை உங்க சந்தேகம் தீரலைன்னா, ஒவ்வொரு இடத்துலயா சாம்பிள் எடுத்து நாக்கில் வைத்து டெஸ்ட் பண்ணிட்டு சொல்லுங்களேன்...?
“இந்த 55 ஆண்டுகளில், அவர்களுக்கு பின்னால் வந்த, பாவலர் அப்பா, LK அப்பா உட்பட எந்த தலைவரும் முயற்சி எடுக்கவில்லை. ஏன் MKT அப்பா அவர்களின் மருமகள் (மகனின் மனைவி) நாச்சி தம்பி ராத்தா அவர்கள் தலைவியாக இருந்தபோது கூட அந்த முயற்சி எடுக்கப்படவில்லை. இதற்கும் இந்த, "சுயநலம் பாராது உழைக்கும்(?)" அமைப்பினர் பதில் சொல்வார்களா?” C&P
என்னங்க ஆச்சி உங்களுக்கு...? நல்லா இருக்கீங்கன்னுல்ல நினைச்சிட்டு இருக்கிறேன்...? அவங்க ஏன் முயற்சி எடுக்கலேன்னு அவங்கட்ட அல்லவா நீங்க கேள்வி கேட்கணும்? அத விட்டுட்டு சம்பந்தம் இல்லாம மெகாவிடம் இந்த கேள்விய கேக்குறீங்களே...???
“நான் பதில் தருவது இருக்கட்டும். இந்த இரு திட்டங்களும் (பயோ கேஸ் & குப்பை கொட்டும் திட்டம்) இந்த நகராட்சியின் எஞ்சிய காலத்தில் நிறைவேறுகிறதா? அல்லது நிதி அரசுக்கே திரும்பி செல்கிறதா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.” C&P
அத மட்டும் இல்லீங்க, ஏழை, எளியவர் வரிப்பணத்தில் - சாலை வசதிகள், தெரு விளக்குகள் வசதி பெற்று, நிலங்களை அதிக விலைக்கு விற்று லாபம் அடைய துடிக்கும் தனவந்தர்கள் என்ற பெயரில் அலையும் நிலத் தரகர்கள் கூட்டம் வெற்றி பெறுகிறார்களா என்றும் சேர்த்தே பார்ப்போம் காக்கா!
அது சரி... “CRZ இல்லை, CRZ இல்லை என்று கூவினீர்களே...? இப்போ CRZ என்று முடிவு வந்த பிறகு அமைதியாக இருக்கிறீர்களே...?” என்றுதானே ஜாவித் நஸீம் காக்கா கேட்டிருக்காங்க? அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல், ஒரு முழு நீள கதையையே எழுதி இருக்கீங்களே காக்கா...? உண்மையிலேயே உங்க திறமைக்கு ஒரு சபாஷ் போடலாம் போங்க!!!
கடைசியா ஒன்று! மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு விடக்கூடாதே என்ற கவலையில் ‘மெகா’ இரண்டு ஆண்டுகளுக்கு முன் எதைச் சொன்னதோ, அதே காரணத்தை முன்வைத்துதான் இன்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த சர்வே எண் 278ஐ மீண்டும், மீண்டும் தள்ளுபடி செய்திருக்கிறது.
நானும் ‘மெகா’வின் ஓர் அங்கம் என்ற அடிப்படையிலேயே இத்தனை கருத்துக்களையும் பதிந்துள்ளேன். சந்தேகம் இருந்தா திரும்ப கேளுங்க காக்கா. எனக்குத் தெரிந்த விளக்கத்தைத் தரக் காத்திருக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross