புதுப்புது அம்சங்களுடன் தொய்வின்றித் தொடர வேண்டும்! posted byHameed Rifai (jeddah ksa)[15 March 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 39630
நஹ்வியப்பா நற்பணி மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டுள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி. அதுபோல, பெண்களுக்கான வட்டார அளவிலான பைத்துல்மால் அமைப்பை, பெண்களைக் கொண்டே நிர்வகித்து நடத்த தீர்மானித்திருப்பது பாராட்டத்தக்கது. இந்த நல்ல முயற்சிகள் தொய்வின்றித் தொடர துஆ செய்கிறேன்.
கிழக்குப் பகுதியில் பொதுமக்களிடம் கலை ஆர்வம் மிகுந்துள்ளதை நான் அறிவேன். கடந்த காலங்களில் இதுபோன்ற மீலாது விழாக்கள் தொடராக நடத்தப்பட்டு வந்ததால், கட்டுரைப் போட்டி, கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சுப்போட்டி என பல்சுவை அம்சங்களுடன் அவர்களது கலையார்வம் களமிறக்கப்படும். தற்போது அது முற்றிலும் இல்லாமலாகிவிட்டது.
இனி வருங்காலங்களில், இதுபோன்ற புதிய அம்சங்களுடன் இந்நிகழ்ச்சி இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் ஆசை. அதற்கான என்னாலான ஒத்துழைப்புகளை வழங்கவும் ஆயத்தமாக உள்ளேன்.
அதுபோல, பெண்கள் தைக்காக்களில் வழமையாக நடைபெறும் வணக்க வழிபாடுகளைத் தாண்டி, மகளிருக்கான பயனுள்ள நூலகம் அங்கு அமையப்பெற வேண்டும். சமூகப் பணிகளில் மார்க்கம் அனுமதித்த அளவில் மகளிரும் களமிறங்க வேண்டும். அதற்கு இந்த பெண்கள் தைக்காக்கள் செயல் களமாகத் திகழ வேண்டும் என்ற எனது ஆசையையும் இங்கே பதிவு செய்வதில் மகிழ்ச்சிடைகிறேன்.
வல்ல அல்லாஹ் நம் யாவரின் நற்காரியங்களையும் கபூல் செய்து மேலான கிருபைகளைச் சொரிந்தருள்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross