மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக தலைவி மினிட் புத்தகத்தில் எழுதினார் posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி)[18 March 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39659
அட்மின், இந்த தலைப்புக்கு சம்பந்தம் இல்லையென்று இந்த தகவலை தள்ள வேண்டாம்.
ஆதம் சுல்தான் காக்கா லாஜிக் படி, தலைவி தீர்மானத்தை மாற்றி எழுதவே முடியாது. எந்த நகரமன்ற கூட்டத்தில், வாகனம் வாங்குவது சம்பந்தமாக தீர்மான சர்ச்சை நடக்கிறதோ, அதே கூட்டத்தில், தண்ணீர் வண்டி பழுது பார்க்கும் செலவு விஷயமான பொருள் எண்: 13-க்கு விவாதம் நடந்தது.
“பழுதடைந்த அந்த வாகனத்திற்கு முறையான ஆவணங்கள் கூட இல்லையென்றும், எனவே இதற்கு இவ்வளவு தொகை செலவழிப்பதை விட, புது வாகனம் வாங்கலாம் என்றும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், புது வாகனம் வாங்கிட table agenda மூலம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தனர்”. (C&P) இந்த இணையதளத்தின் செய்தி எண்: 8410.
ஆனால், இந்த செய்திக்கு மாற்றமாக, மன்றம் அனுமதிக்கிறது என்று தலைவி மினிட் புத்தகத்தில் எழுதினார் என்பதை இந்த லிங்கில் காணலாம். http://123.63.242.116/Kayalpattinam/theermana%20apr%202012%2027.04.12.pdf
மீண்டும் அதே பொருள் குறித்த விவாதம் 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்றது. அந்த கூட்டம் பற்றி இதே இணையதளத்தில் செய்தி எண்: 9565- ல் பொருள் எண்: 24 க்கு
“பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில் கடந்த கூட்டத்தில் எவ்வாறு தீர்மானம் மாற்றியெழுதப்பட்டது என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேள்வியெழுப்பினார். அதே கேள்வியை 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகுவும் வலியுறுத்தினார்.
அன்றைய கூட்டத்தில் இதுகுறித்து ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே கருத்து தெரிவித்ததாகவும், கூட்டத்தில் பங்கேற்ற இதர உறுப்பினர்கள் எவரும் இவ்விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். .” (C&P)
ஏப்ரல் மாத கூட்டம் பற்றிய செய்தியில் இந்த இணையதள நிருபர் தெரிவித்த தகவல் சரியா? அல்லது “இதர உறுப்பினர்கள் எவரும் இவ்விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று சொல்லும் நகர்மன்றத் தலைவர் தகவல் சரியா? என்று ஆதம் சுல்தான் காக்கா மற்றும் நடுநிலையானவர்கள் தீர்மானிக்க விட்டு விடுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross