Re:... posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி)[18 March 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39660
தம்பி, ஹாமீத் ரிபாய், சகோதரர் ஜாவித் நசீம் அவர்களை பற்றி தெரிந்திருந்தால், நான் ஏன் விளக்கம் கேட்க போகிறேன். உங்களை பற்றியோ என் கருத்துக்கு மறுப்பு கொடுக்கும் மற்றவர்கள் பற்றியோ விவரம் கேட்டதில்லை. அது எனக்கு தேவையில்லை. கருத்துக்கு மாற்று கருத்து சொல்பவர் என்று எடுத்துக் கொண்டுள்ளேன். மேலும் இந்த விஷத்தில் சம்பந்தம் இல்லாமல் என் பெயரை இழுத்ததனால், விபரம் கேட்கிறேன். அவர் யார் என்று உங்கள் பதிலிலும் சொல்லவில்லை.
மேலும் அவர் வழமையாக கருத்து பதிபவரல்ல என்பது “இவரின் பிற கருத்துக்களை காண இங்கே அழுத்தவும்” என்ற பகுதியில் பார்த்தால், இவர் எப்போது, எந்த தலைப்புகளில் கருத்து பதிந்துள்ளார் என்பது தெரியும்.
“அபூரஹ்மத்’ என்ற பெயரில் கட்டுரையே எழுதினார்கள். ………………..அதன் கீழும், மேலும் பல கருத்துக்களை தாங்களும் பதிந்து வந்துள்ளீர்களே...? அப்போதெல்லாம் விபரம் கேட்கத் தோன்றவில்லையோ?” (C&P)
அவர்கள் எந்த புனைப்பெயரில் கட்டுரை/கருத்து பதிந்தால் எனக்கென்ன? என்னை சீண்டாதவர்களை பற்றி நான் ஏன் விளக்கம் கேட்க வேண்டும். அந்த கட்டுரை/கருத்தில் உடன்பாடு /மாற்று கருத்து இருந்தால் என் கருத்தை தெரிவிப்பேன்.. “இந்த இணையதளம் ஒரு கருத்தாளர் யார் என அறியாமல் கருத்துப்பதிவுக்கு அனுமதிப்பதும் இல்லையே...?” (C&P). அவர் புனைப்பெயரில் எழுதினார் என்று நான் சொல்லவில்லை.
“MEGA நோட்டீஸ் என்ன பத்திரிக்கையா? இரு தரப்பு செய்திகளையும் போட???” (C&P) அது தான் தெரியுமே, “ஜால்ரா அமைப்பு” என்று.
இந்த நிலம் கடலில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் இருக்குமா? ஆனால் DCW நச்சு ஆலை அதன் நச்சு அமிலங்களை எங்கிருந்து (எவ்வளவு தூரத்தில்) கலக்கிறது? அல்லது அந்த நச்சு ஆலை வெளியிடும் அமிலங்கள் எந்த இடத்தில் இருந்து நச்சுத்தன்மையாக மாறுகிறது? என்ற என் கேள்விக்கு பதிலை சொல்லாமல், “இந்த நிலம் கடலில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் இருக்குமா?” C&P என்ற வரியை மட்டுமே எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்.
“இந்த அறிவுப்பூர்வமான (???) கேள்விக்கு உங்களுக்கு அப்போதே முகநூலில் பதில் கூறப்பட்டதே? அதற்குள்ளே மறந்துவிட்டீர்களா காக்கா...?” (C&P) “ஒட்டி! ஒட்டி!! ஒட்டினார் போல!!! அதாவது 0 மீட்டர்!!!!” (C&P)
தம்பி, “புத்தி’சாலி” தனமாக பதில் கொடுத்துள்ளீர்கள் என்ற நினைப்பா? முகநூலில் என்ன பதில் சொன்னீர்கள்? என்று அடித்தல் திருத்தல் இல்லாமல் முழுமையாக இங்கே பதிந்தால் , முகநூலை பார்க்காத மற்றவர்களுக்கு விபரம் புரியும்.
அப்போ, கடலுக்கும் இந்த நிலத்துக்கும் இடையே ஒரு சென்ட் கூட தூரம் இல்லை. அதாவது தானம் தந்த இடம் (278/1) முழுமையும் CRZ வருகிறது. அப்படி தானே? முழுவதும் CRZ வரும் இடத்தையா இந்த அதிகாரிகள் தானமாக பெற்றார்கள்?
மீண்டும் கேட்கிறேன், அந்த ஆலையின் கழிவுகள் எங்கிருந்து நச்சுத்தன்மை ஆகிறது? என்ற விளக்கம் மக்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும்.
“DCW தொழிற்சாலையினால் மாசு ஏற்படுகிறது! ஆய்வறிக்கை, மண் மற்றும் நீர் பரிசோதனை முடிவுகள் ஊர்ஜிதம்” (C&P) (இந்த இணையத்தின் செய்தி: 10907) மண் மற்றும் நீர் பரிசோதனை எங்கிருந்து எடுத்தார்கள்?
உங்களின் முந்தைய நோட்டிஸ் விடுவதற்கு 5 மாதங்களுக்கு முன்பே இந்த ஆய்வறிக்கை இதே இணையத்தால் வெளியடப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில் அந்த நச்சு ஆலையினால் மாசு ஏற்படுகிறது என்று சொல்லப்பட்ட பிறகும், “பிற்காலத்தில், அந்த ஓடை மாசுபட தான் காரணமில்லை என்று சொல்லும்” என்று எப்படி அப்பட்டமாக பொய் சொல்ல முடிந்தது.
“ஒவ்வொரு இடத்துலயா சாம்பிள் எடுத்து நாக்கில் வைத்து டெஸ்ட் பண்ணிட்டு சொல்லுங்களேன்...? (C&P)
மேலும், “மொட்டைத் தலைக்கு எத்தனை வகையான பூவெல்லாம் சூட??? ஆசைய பாருங்களேன் ஆசைய...? காக்காக்கு” (C&P) )உங்களின் கருத்து எண்:31051) உங்களின் தரமான விமர்சனம் வெளிப்படுகிறது. நன்றி!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross