Re:...இறைவனிடம் கையேந்துவோம் .... posted bymackie noohuthambi (kayalpaattinam)[11 April 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40097
நான் வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு ஊரில் வந்து இறங்கிய காலை பொழுது அது. எனது அலைபேசிக்கு ஓர் அழைப்பு. சற்று வேலையாக இருந்த நான் சில நாழிகை கழித்து அதை எடுத்து பேசினேன்.
"ஹலோ!...இது நான்.
மறுமுனையில் இருந்து, "ஏன் போனை எடுத்தீர்கள் அழகான பாட்டு போகிறது இன்பமாக கேட்டுக் கொண்டிருந்தேன், கட்டாகி விட்டதே"....
அது என்ன பாட்டு ? அதுதான் "இறைவனிடம் கையேந்துங்கள்...அவன் இல்லை என்று சொல்லுவதில்லை"....
எதெல்லாமோ ரிங் டோன் வைக்கிறார்கள். காலைப் பொழுதில் இறைவனை நினைத்து அவனிடம் வேண்டி பொழுதை ஆரம்பிக்க அற்புதமான வரிகள். நாகூர் ஹனீபா மறைந்து விட்டாலும் இன்னும் பாடிக் கொண்டிருக்கிறார் அதை உங்கள் ரிங் டோன் சொல்கிறது என்றார். மனம் மகிழ்ந்து போனேன்.நெகிழ்ந்து போனேன்....
ஓடி வருகிறான் உதய சூரியன்...., அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா.... தமிழ் மணக்கும் சோலையெல்லாம் தேடினேன் உன்னை சான்றோர் தம் அவை எல்லாம் அலைய விட்டேன் கண்ணை, எங்கே சென்றாய் எங்கே சென்றாய் எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய்...இது அண்ணாவை நினைவுபடுத்தும்.
கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே எங்கள் உள்ளம் குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே...இது கலைஞரை நினைவுபடுத்தும்.
காய்ந்து சிவந்தது சூரியகாந்தி கனலில் தோய்ந்து சிவந்தது காய்ச்சிய தங்கம் ஆய்ந்து சிவந்தது அறிஞர் தம் நெஞ்சம் தினம் ஈந்து சிவந்தது எம்ஜியார் இருகரமே....இது புரட்சி தலைவர் எம்ஜியாரை நினைவுபடுத்தும்.
இஸ்லாமிய கீதங்கள் என்றாலே அதன் பிதாமகன் நாகூர் ஹனீபா அவர்கள்தான். அகவை 90 தாண்டி தன் வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாக நிம்மதியாக முடித்துக் கொண்டு இறைவனிடம் சென்றிருக்கிறார்கள். இசைக் கருவிகள் முழங்க இசைகள் வழங்குவதை இஸ்லாம் தடை செய்துள்ளது என்ற செய்தி இவருடைய விஷயத்தில் எப்படி இருக்கும் என்பதை அல்லாஹ்வே முடிவு செய்வான். பாவங்களை சிறு நன்மைகளும் கூட இல்லாமல் ஆக்கிவிடுகின்றன. அவற்றை மன்னிப்பது அல்லாஹ்வுக்கு ஒரு பொருட்டே அல்ல.
எனவே அல்லாஹ் அவர்கள் பாவங்களை பொறுத்து அருள்வானாக . அவர் தன் பாடல்கள் மூலம் இஸ்லாமிய மார்க்க உணர்வுகளை மக்களிடம் பரப்பியுள்ளார் என்ற காரணத்தால் அல்லாஹ் அவர்கள் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக, மேலான சொர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக என்று இறைவனிடம் கையேந்துவோம்.. அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன் ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன் தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன். தரணி எல்லாம் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்.
அவர்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக...
அவர் வாழ்ந்த காலமெல்லாம் திராவிட முன்னேற்ற கழக உறுப்பினராக இருந்து இஸ்லாமிய பாடல் மேடைகளிலும் ஒரு பாடலாவது கழகத்தை பற்றி பாடாமல் அவர் கீழே இறங்கியதில்லை. திமுக மாநாடுகள் அவருடைய பாடல்களுடன்தான் அரங்கேறும்.
அந்த மாமனிதனுக்காக அவர் நினைவாக
ஒரு மணி மண்டபம் அமைக்க கலைஞர் முன் வருவாரா...
அண்ணா அறிவாலயம் -
கலைஞர் நினைவாலயம் போல்
நாகூர் ஹனீபா இசையாலயம்
ஒன்றை நிறுவி கலைஞர் தன் நன்றி கடனை நிறைவேற்றுவாரா...
நமதூர் கவிஞர் - சட்டமன்றம் செல்லாத நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் MLA என்று அழைக்கப் பட்ட செய்து அஹ்மத் அவர்களும் இப்படித்தான் கழகத்தை தன் உயிர்மூச்சாக நேசித்தார். ஆனால் அவர் மறைவுக்கு ஒரு நினைவு அஞ்சலி கூட கலைஞர் செலுத்தியதில்லை என்ற மன நெருடல் இப்போதும் என் போன்றவர்கள் மனதில் அவ்வப்போது வந்து மறையும்.
திருக்குறள் எண் 110 மிக அழகாக சொல்கிறதே
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்பது இந்த குறளோவிய நாயகனுக்கு தெரியாதா....
விதி எண் 110 மூலம் மிக அவசரமாக -
சட்டங்களையும் நல திட்டங்களையும் அள்ளி வழங்கும் மக்களின் முதல்வருக்கு இது புரியாதா....இந்த அரசியல் கட்சிகள் எல்லாமே ஹனீபாவுக்கு நிறய கடமை பட்டுள்ளன....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross