செய்தி: விபத்தில் இறந்த பள்ளப்பட்டி அரபிக்கல்லூரியின் மார்க்க அறிஞர்களுக்காக மகுதூம் ஜும்ஆ பள்ளியில் ஙாயிப் ஜனாஸா தொழுகையுடன் நல நிதி சேகரிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அரசு என்ன செய்ய இருக்கிறது. posted bymackie noohuthambi (kayalpaattinam)[11 April 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40098
பக்தி பரவசத்துடன் கோயில்களுக்கு செல்பவர்கள் அங்கிருந்து திரும்பி வருபவர்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தால் கருணையும் நிதியும் மிக்க கருணாநிதி அரசு நிதியிலிருந்து தன் இரங்கலை தெரிவிப்பார் அவர் முதலமைச்சராக ஆட்சியில் அமர்ந்து இருந்தபோது -
மறைந்தவர்கள் வீட்டுக்கே சென்று அவர்களின் மனைவி மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிதி வழங்கி அவர்கள் மனங்களில் தாய் உணர்வை பிரதிபலிக்க செய்வார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது. இப்போதும்கூட அவர் மக்களின் முதல்வராக முன்னிலைப் படுத்தப்பட்டு தமிழக அரசை வழிகாட்டி செல்கிறார்.
இவர்களுக்கெல்லாம் இந்த இஸ்லாமிய உலமாக்கள் உயிரிழந்த செய்தி போய் சேரவில்லையா... தமிழ்நாடு முன்னேற்ற கழகம் வைத்த கோரிக்கை இன்னும் போயஸ் தோட்டத்து இதயக் கதவுகளை தட்டவில்லையே ஏன் எப்போதும் முஸ்லிம்களுக்கு தன் இதயத்தில் இடம் இருக்கிறது என்று கூறும் கலைஞரின் இதயம் இன்னும் இயங்காதது ஏன்.....
இந்த சமுதாயம் அந்த மறைந்தவர்கள் குடும்பத்துக்கு உதவி செய்யும் பொறுப்பை தன் கையில் எடுத்து நிதி சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது அது காயல்பட்டினத்தில் மொகுதூம் ஜும்மா பள்ளியில் அரங்கேறி இருக்கிறது. மக்கள் கண்கலங்கி போனார்கள். விழிநீரை துடைக்க தம் பொருளாதார உதவிகளை காணிக்கையாக்கி தாராளமாகி அள்ளிக் கொடுக்கும் காட்சி மனதை தொடுகிறது.
எல்லா பள்ளிவாசல்களிலும் இந்த அழகிய முன்மாதிரி நடைமுறைப் படுத்தப் படவேண்டும். நாட்கள் வேகமாக நகர்ந்து நினைவுகள் மறைந்து விடுமுன் இழந்தவர்களின் குடும்பத்துக்கு வெகு வேகமாக இந்த நிதி சென்றடைய வேண்டும். இதற்காக முயற்சி மேற்கொண்டுள்ள எல்லோருக்கும் அல்லாஹ் உதவி செய்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross