செய்தி: அரசாணைக்கு முரணாக இயங்குவதாக எச்சரிக்கப்பட்டும் குறைகளைக் களையாத காயல்பட்டினம் நர்சரி பள்ளி உள்ளிட்ட 6 மழலையர் பள்ளிகளை மூட அரசு உத்தரவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
குழந்தைகளின் பாதுகாப்பு / சுகாதார சுற்றுசூழல் மிகவும் அவசியம்.... posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[22 April 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40241
எதுவாக இருந்தாலும் சிறார்கள் படிப்பு பாதிக்க கூடாது.
தீவு தெருவில் பல ஆண்டுகாலமாக இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் மேல்தளத்தில் தற்போது குறுகிய காலதில் இயங்கி வந்த பாத்திமா நர்சரி பள்ளிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கும் இடையே கழிப்பறைகள் / குடி நீர் / வகுப்பறைகள் உரிமை பிரச்சனைகள் இருந்து வருவதாக கேள்விபட்டேன் - அது எதுவாக இருந்தாலும் அங்கு பாதிக்கபடுவது அங்கு ஒரே கட்டிடத்தில் இயங்கும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மட்டுமே..!
அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கல்வி முன்னேற்றத்திற்காக / வகுப்பறைகள் விரிவாக்கதிற்காக நகரின் பல தனவந்தர்கள் / வெளி நாட்டின் காயல் நல மன்றங்கள் என பல நல்லுள்ளங்கள் வகுப்பறைகள் கட்டி கொடுத்தமைக்கு சாட்சிகளாக அங்கு பல கல்வெட்டுக்கள் காண முடிகின்றன.
தற்போது மேல்தளத்தில் இயங்கி வரும் பாத்திமா நர்சரி பள்ளிக்கு என தொடக்கக் கல்வித்துறையின் அங்கீகாரமின்றியும், முறையான கட்டிடங்கள் இன்றியும் வசதியற்ற கட்டிடங்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கருதி தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கல்வி துறையால் நடவடிக்கைக்கு உட்பட்ட இப்பள்ளி போதுமான அடிப்படை வசதிகளுடன் (குழந்தைகளின் பாதுகாப்பு / சுகாதார சுற்றுசூழல் அமைப்புடன்) புது பொலிவுடன் மீண்டும் தீவு தெரு சுற்று வட்டார பகுதியில் / தீவு தெரு சுற்று வட்டார குழந்தைகள் பயன் பெறும் வகையில் விரைவில் இப்பள்ளி முறையான அரசு அனுமதி பெற்று இனிதே இயங்கிட வாழ்த்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross