செய்தி: அரசாணைக்கு முரணாக இயங்குவதாக எச்சரிக்கப்பட்டும் குறைகளைக் களையாத காயல்பட்டினம் நர்சரி பள்ளி உள்ளிட்ட 6 மழலையர் பள்ளிகளை மூட அரசு உத்தரவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாத்திமா நர்சரி பள்ளி மீண்டும் எல்லோர் மகிழ்வுடன் இயங்கிட வேண்டும்! . posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[22 April 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40242
சகோதரர் முத்து இஸ்மாயில் கருத்து வரவேற்கதக்கது!
ஏற்ப்பட்டுவிட்ட இன்னலை களைந்து,விரைவில் அப்பள்ளி நல்ல முறையில் இயங்க வேண்டும் என்றுதான் நம் அனைவர்களின் வேண்டுதலாக இருக்க வேண்டுமே தவிர,
வேறு சிந்தனைக்கு நம் எண்ணங்களை செலுத்திவிடக் கூடாது வேறு எண்ணங்களின் கருத்துப்பதிவை அந்த நிர்வாகம் பின்பற்றினால், அது அந்த பள்ளி இனி இயங்கும் பணியில் பின்னடைவைத்தான் ஏற்படுத்திவிடும்! .
நம் மாவட்டத்தில் ஆறு பள்ளிகள் அரசாணைக்கு முரணாக இயங்குகிறது என்று குறிப்பிட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் நமதூரில் அனைத்து பள்ளிகளையும் விட்டுவிட்டு இந்த ஒரு பள்ளியை மட்டும் குறிப்பிடவேண்டும் என்ற அவசியம் இல்லை.மேலும் இந்த ஆறு பள்ளிகளும் ஒரு குறிப்பிட்ட இனத்தினருடைய நிர்வாகத்தின் கீழ் இயங்குவதும் அல்ல!
நமக்குள்ள தவறையுணர்ந்து அதை களைய முற்பட வேண்டுமே தவிர,வேறு பக்கம் நாம் பார்க்கத் தேவையில்லை.தவறு யார் செய்தாலும் தவறு தவறுதான். தயவுசெய்து சமரச கருத்துப் பதிவால் உண்மைக்கு மாறான ஒரு பொய்யையோ,பிற பிரிவினை எண்ணங்களையோ துணைக்கு அழைத்திட முயற்சிக்க வேண்டாம்!
தவறு செய்து தண்டிக்கப்பட்டவர் அத்தண்டனையிலிருந்து வெளிவருவதற்குறிய தீர்ப்பைப்பெற தம் சிந்தனையை செலுத்தவேண்டுமே தவிர,தன்னெதிரிக்கும் தமக்கு வந்த நிலை விரைவில் வந்திடாதா? என்ற எதிர்பார்ப்புக்குறிய இறுகிய, ஈனத்தனமான எண்ணோட்ட உலகில் வாழும் நாம் நம்முடைய ஏடாகோடா எண்ணப்பறவையின் சிறகை இறுக்கமாகப்பிடித்துக் கொள்வது நம்முடைய பெருந்தன்மை எண்ணங்களின் பிரதிபலிப்பாகும்!
என்னுடைய பேத்தி மிக,மிக நன்றாக பயின்றதோடு மட்டுமல்ல அவளை நன்றாக பயிற்றுவித்து பிரமாதமாக கொண்டுவந்த இந்த பாத்திமா நர்சரி பள்ளி மீண்டும் எல்லோர் மகிழ்வுடன் திறந்து இயங்கிட எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross