Re:...மூன்று முத்துக்கள் posted bymackie noohuthambi (kayalpatnam)[01 May 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40302
ஆமினா ஜைத் மட்டுமல்ல அவரது சகோதரிகள் பசீஹா, மின்ஹா மற்றிரு சகோதரிகளும் வெவ்வேறு ஆற்றலுக்காக பரிசுகளை தட்டி சென்றார்கள்.
நான் கொழும்பில் இவர்களை நேரில் சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இப்படி மூன்று முத்துக்களை பெற்றுள்ள இவர்கள் தாயாரை சந்தித்து "'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகளை சான்றோர் எனக் கேட்ட தாய்"" என்ற குறளையும் ஞாபகப் படுத்தினேன். அமீரகத்தில் வாழும் அவர்கள் தந்தையுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன்.
சிலர் சொல்வதுபோல், வாழ்த்துவதற்கு வயதும் தேவை இல்லை வணங்கவும் தேவை இல்லை.நல்ல இதயம் - நல்லவைகளை பாராட்டும் உயர்ந்த உள்ளம் இவை இருந்தாலே போதும்.
வெளி நாட்டில் இருந்தாலும் படித்தாலும் மண் வாசனை மறவாமல் மார்க்க பக்தி ஒழுக்கம் குறையாமல் வாழும் இயல்பை இந்த குடும்பம் தக்க வைத்துக் கொண்டுள்ளது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கெலி ஓயாவில் மலைக்குமேல் இருக்கும் இவர்கள் வீடு மனதுக்கு இதம் அளிக்கிறது. பச்சை பசேலென்று இயற்கையின் சூழலில் வாழ்கிறார்கள். இந்த குடும்பத்தினர் எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா நலமும் வளமும் பெற்று பல கல்விகள் பெற்று நீடூழி வாழ அருள் புரிவானாக. ஆமீன்.
DHO YAA THEEN BACHE HO THEYHE GAR MAY ACHE......என்று ஹிந்தியில் ஒரு பழமொழி சொல்வார்கள். இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் இருந்தால் அந்த வீடு வாழ்வதற்கு நிம்மதியான சந்தோஷமான வீடாக அமையும் என்பது அதன் கருத்து என்று என் நண்பர் சொன்னார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross