மாறுபட்ட அரசியல்வாதி! posted byS,K.Salih (Kayalpatnam)[03 May 2015] IP: 59.*.*.* India | Comment Reference Number: 40366
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சிறிய குத்பா பள்ளிக்குச் செல்லும்போது சரியாக அவர்கள் கண்களில் நான் படுவேன்; என் கண்களில் அவர்கள் படுவார்கள். “அஸ்ஸலாமு அலைக்கும் மருமகனே... சொகந்தானா?” என்று கேட்டுவிட்டு, சில நிமிடங்கள் பேசுவார்கள்.
எனது சிறு வயது முதல் அவர்களது அரசியல் வாழ்வை அவதானித்து வந்துள்ளேன். அவர்களது மேடைப் பேச்சுகளையும் கேட்டுள்ளேன். அரசியல் ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் சிலருடன் அவர்களுக்கு இருந்திருக்கும். அந்தக் கருத்து வேறுபாடுகளை மட்டும் விமர்சித்து, அவர்கள் பாணியில் விளக்கமளிப்பார்களே தவிர, அது தொடர்பானவரை ஒருமையிலோ, தரம் தாழ்ந்தோ, அநாகரிகமாகவோ, அவர்களது சொந்த வாழ்வில் தலையிட்டோ பேசி நான் அறிந்ததில்லை.
இந்த வகையில், நடப்பு அரசியல் உலகத்தில் அவர்கள் முற்றிலும் மாறுபட்டிருந்தார்கள்.
அவர்களது இந்தத் திடீர் மரணம் அடுத்த சில நிமிடங்களில் (அதிகாலை 04.00 மணியளவில்), நண்பன் நோனா உவைஸ் மூலமாக எனக்குக் கிடைத்தது. உடனடியாக - சொளுக்கு மாமா அவர்களது மருமகனார் நகர்மன்ற உறுப்பினரான நண்பன் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் இடம் விசாரித்து, செய்தியை உறுதி செய்துகொண்ட பின், உடனடியாக செய்தியை வெளியிட்டேன்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட - தவிர்க்கவியலாத ஒரு பயணம் எனக்கிருந்தமையால், ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் ஜனாஸாவைப் பார்த்துவிட்டு புறப்பட்டுவிட்டேன். நல்ல வேளை! திரும்பி வர அதிக தாமதமாகவில்லை. மாலையில், குத்பா பெரிய பள்ளியில் அவர்களது அடக்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நண்பர்கள் யாவரும் வந்து சேர்ந்துவிட்டோம்.
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மாமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - மர்ஹூம் அவர்களது மகன் என் பாசத்திற்குரிய தம்பி சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ், மருமக்களான ஜெ.பி. காக்கா, நண்பன் அஜ்வாத் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross