லஞ்சம் ஊழல் ஆகியவைகள் அங்கீகரிக்கப்பட்ட துறை என்றால் அது பத்திரப் பதிவு துறை தான். இது அனைவர்களுக்கும் தெரிய தான் செய்யும். கண்காணிப்பு கேமரா நிறுவி, அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு, வெளிப்படையான நிர்வாகம் நடப்பதாக சொல்லுகிறார்களே, ஊழல் மறைந்து விட்டதா..?
பாஸ் போர்ட் வெரிபிகேசன் என்று நம் ஆறுமுகநேரி காவல் துறை அடிக்கும் பகல் கொள்ளைக்கு அளவே இல்லை. 300 ரூபாய், 350 ரூபாய் என்று ரேசன் கடையில் பில் போட்டு பணம் கேட்பது போல ஒரு கூச்சம் கூட இல்லாமல் லஞ்சம் வாங்குகிறார்கள்.
சென்ற வாரம் என் தாயாரின் பாஸ் போர்ட் வெரிபிகேசன் என்று வந்த காவலர், 350 கொடுங்க என்ற அதிகார தோரணையில் வாங்கி சென்றுள்ளார்.
ஏன் கொடுத்தீர்கள் என்று வினவியதும்..?
நான் பீஸ் என்று நினைத்தேன்.
பாஸ்போர்ட் ஏஜெண்டு கூட சொன்னார்.. போலீஸ் வருவாங்க..! ஜெராக்ஸ் காப்பி எல்லாம் கேட்பாங்க ..!! போட்டோவும் கேட்பாங்க.!! கூடவே 300 ரூபாயும் கேட்பாங்க.!! கொடுத்து விடுங்க என்றார் .. என்று வடிவேல் பாணியில் கூறினார்கள்.
நானோ தனியாக வீட்டில் இருந்தேன், போலீஸ் என்றாலே எனக்கு சிறுவயதில் இருந்து பயம், பணம் கொடுக்காவிட்டால் அது இது என்று சொல்லி இளுத்து அடித்து விடுவார்களோ என்ற பயமும் கூட என்று, தான் இயாலாமையையும், அறியாமையையும் கூறினார்கள் .
இதில் என்ன கொடுமை என்றால், இரண்டு வாரங்களுக்கு முன்பு என் மாமி பாஸ்போர்ட் வெரிபிகேசன் என்று காவல் நிலையம் வரச்சொல்லி 300 ரூபாய் பிடிங்கி விட்டார்கள். என் தாய்க்கு வீட்டிற்க்கு வந்து 350 ரூபாய் பிடிங்கிக்கொண்டார்கள். ஆறுமுக நேரியில் இருந்து காயல்பட்டினம் வந்து செல்ல பஸ் கட்டணம் 50 ரூபாயா..!! லஞ்சம் வாங்குவதில் கொஞ்சம் கருணை காட்டுங்கள் காவல் துறை ஐயா மார்களே .
500, 1000 என்று லஞ்சம் வாங்குபவன் அங்கும் இங்கும் என்று மாட்டிக்கொள்கிறான். பல கோடி அடித்தால்..!!!
ஊழல் புரிந்த ஒரு குற்றவாளி, 18 வருடங்களாக சட்டத்தில் அத்தனை ஓட்டைகளிலும் புகுந்து, பல்வேறு வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பல்வேறு கோணங்களில் இந்த வழக்கை பார்க்க வைத்து, ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறார். அதை இந்த நீதிமன்றங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊழல் வழக்கை தன் தலையில் வைத்துக் கொண்டே, இரண்டு முறை ஆட்சியையும் பிடித்து விட்டார்.
இனி என்னத்தை சொல்லுவது..!! ஆக லஞ்சதை சட்ட பூர்வமாக ஆக்கி, இது இதுக்கு இவ்வளவு லஞ்சம் என்று போர்ட் வைத்து விட்டால் மக்களுக்கு குழப்பங்கள் வராமல் இருக்கும் அல்லவா..!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross