Re:... posted bynizam (india)[05 May 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 40390
இந்தியாவை பொருத்தவரை ஊழல் மறைய ஆயிரம் வருடம் ஆகும் என்ற வழக்கு சொல் ஒன்று உண்டு.
சமிபத்தில் கத்தார் நாட்டுக்கு சென்றிந்தேன். விமான நிலையத்தில் அதிகமான மாத்திரைகள் கொண்டு பங்காளி ஒருவர் வந்ததற்காக விசச்ரனை செய்யபட்டார். அவர் அழுக ஆரம்பித்துவிட்டார். அந்த சுங்க அதிகாரி சில குரான் வசனங்களை சொல்லி வரை தேற்றி அனுப்பிவிட்டார்.
நமது நாடாக இருந்தால் என்ன நடந்திருக்கும்?????? ஆக லஞ்சம் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் ஒரு நாள் இந்த உலகை விட்டு சென்று விடுவோம் மறுமை உண்டு இறைவனின் பிடி கடுமையானது என்ற அச்சம் அரபு நாடு அதிகாரிகளிடம் இருபதால் அங்கு லஞ்சத்துக்கு இடமில்லை.
சரி ஐரோப்பாவிற்கு வருவோம் அங்குள்ள மக்கள் தாங்கள் கொடுக்கும் வரியின் தாக்கத்தை தங்களது பகுதியிலே காண்பதால் அங்கு பில் இல்லாமல் சாமான் கொடுத்தால் சண்டைக்கு வந்துவிடுவார்களாம்.
அதனால் இறை அச்சமும் தேசபக்தியும் நம் நாட்டில் வளர்ந்தால் ஒழிய லஞ்சத்தை ஒழிக்க முடியாது.
இன்னொரு காரணம் ஆடம்பரம். சமிபத்தில் உருகுவே நாட்டின் அதிபர் ஒய்வு பெறுவதை அந்த நாட்டின் மக்கள் கண்ணீர் விட்டனர். காரணம் அந்த அதிபர் எந்த லஞ்ச புகாருக்கும் ஆளாகாமல் தனக்கு சொந்த வீடு இல்லாமல் மனைவியின் வீட்டிலே இருந்துள்ளார். அவரை பத்திரிகையாளர்கள் எப்படி தாங்கள் லஞ்சம் வாங்காமல் ஆடம்பரம் இல்லாமல் வால்கிரிர்கள் என்று கேட்டனர். அவர் சொன்ன பதில் நான் எனது அதிக காலம் சிறையிலே (நாட்டு முன்னேற்றத்துக்கு போராடியதற்காக) கழித்ததால் எனக்கு ஆடம்பரம் வெறுத்துவிட்டது என்று சொன்னார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross