posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[05 May 2015] IP: 5.*.*.* | Comment Reference Number: 40392
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
அவ்வப்போது எண்ணெய் விட்டுப்பலகிப்போன பல்சக்கரத்தை திடீரென நிறுத்த நினைப்பது கடினமானவிஷயமே,செம்மறியாட்டுமந்தையாகிப்போன உலகில் மேய்ப்பனே மெய்க்காவலன் செம்மறி ஆடுகளுக்கென்று தனிகுணமொன்றுஉண்டு அதாவது ஒரு ஆட்டிற்குமுன்னாள்சென்று ஒருபிரம்பை நீட்டினால் அந்த ஆடு அதைத்தாண்டிக்குதித்துஓடும் அதற்குமுன் ஒருதடையிருந்தது நியாயமானவிஷயம் பிறகு அந்தபிரம்பை நாம்பின்னிழுத்துகொண்டாலும் மற்ற ஆடுகள் எல்லாமே அதைத்தொடர்ந்து அந்தஇடத்தில் குதித்தான்ஓடும்,
உங்களுடைய மனக்குரல் எனக்குக்கேட்கிறது (mind voice) அதனால் முதன்முதலில் லஞ்சம் கொடுத்தவர்களை நியாயப்படுத்தவில்லை.
நான் திருச்சியிலிருந்த காலத்தில் 1980-90களில் அரசுமருத்துவமனையில் இப்படியொரு வாசகத்தைக்கண்டேன் அதாவது "லஞ்சம் கொடுப்பது குற்றம்" அந்தவாசகத்திற்கு இடையில் லஞ்சமென்ற வார்த்தைக்கு அடுத்து அம்புக்குறியிட்டு மேலே கொஞ்சம் என்று யாரோ ஒருகுசும்பன் எழுதியிருந்தார் அதாவது "லஞ்சம் கொஞ்சம் கொடுப்பது குற்றம் "
லஞ்சமென்ற மஞ்சத்தில் மயங்கியுறங்கும் உலகை மஞ்சள்நீராட்டி விழிப்படையச்செய்யும் முயற்சி என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
உங்கள் (mind voice)மனக்குரல் மீண்டும் எனக்கு விளங்குகிறது இந்தப்புகாரைப்பெறவேண்டுமென்றால் அந்த இலாகாவிற்கு எவ்வளவு கொடுக்கவேண்டும்?
"மயக்கமென்ன இந்த மௌனமென்ன என்ற இசையில் அசைக "
லஞ்சமென்ன.... அதில்கொஞ்சமென்ன..
விலைவா..சியேற்றகாலத்திலே..
லஞ்சமென்ன அதில்கொஞ்சமென்ன
விலைவா..சியேற்றகாலத்திலே
தயக்கமென்ன
இன்னும் மயக்கமென்ன
என்பஞ்ச நிலைதான்பார்த்தபின்னும்
கட்டுகட்டாய் வரும்காணிக்கையில்
பலகட்டிடம் நாங்கள் கட்டிடவைப்போம்
என்பெட்டிகளில் வரும்துட்டுதனால்
பட்டு தொட்டில்கட்டி நாங்கள் உறங்கிடுவோம்
லஞ்சத்தைத்தொட்ட கைகளினால்
யார் நெஞ்சையும் இனி நாங்கள்தொடமாட்டோம்
வஞ்சிக்க நினைக்கும் யாரையுமே நாங்கள்
பஞ்சாய்பிரிக்காமல்விடமாட்டோம்
ஊர்கோலம் போகும் நாள்வரையில்
நாங்கள் தேர்கள்கூட வாங்கிடுவோம்
தேர்களையும் ஊர்களையும்
லஞ்சமாக பெற்றிடுவோம்
லஞ்சமென்ன அதில்கொஞ்சமென்ன
விலைவா..சியேற்றகாலத்திலே
தயக்கமென்ன
இன்னும் மயக்கமென்ன
என்பஞ்ச நிலைதான்பார்த்தபின்னும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross