கல்லில் நார் உரிப்போம்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[05 May 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40395
சகோதரர் ஜியாவுதீன், நிஜாம் ஆகியோர் மிக அழகாக யதார்த்த உலகை வெள்ளித்திரையில் விளக்குவதுபோல் விளக்கி இருக்கிறார்கள் பாராட்டுக்கள். பாராட்டுக்கள் மட்டும்தான் உங்களுக்கு பலனோ....ம்ஹூம்... கிடைக்காது நான் எழுத போகும் என் இந்த கருத்தையும் சேர்த்துதான்!
காசு வைத்து சீட்டு விளையாடியதாக சிலரை கைது செய்த காவல் துறையினர் அவர்களின் ஒரு கையில் சீட்டைக் கொடுத்து மறு கையில் இனி நான் சீட்டு விளையாட மாட்டேன் என்ற பெயர் பதாகையையும் ஏந்தசெய்து ஊர்வலமாக காவல் நிலையத்திற்கு கூட்டிச்சென்றார்கள். அவர்கள் சுமார் பத்து ஆயிரத்திற்குமேல் வைத்து விளையாடி இருக்கிறார்கள், அத்தனை பணத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், களத்தில் 1500 ரூபாய் மட்டுமே கைப்பற்றியதாக கணக்கு கொடுத்து இருக்கிறது காவல்துறை. காவலர்களால் பிடிக்கப்பட்ட அந்த குற்றவாளிகளைவிட பன்மடங்கு பகல் திருடர்கள் இவர்கள் என்றால் அது மிகையாகுமா?
நான் ஊரில் இருந்த நேரத்தில் என் உற்ற நண்பர் “தைக்கா“ தெருவை சேர்ந்தவர் அவருடன் ஒருநாள் உரையாடிக்கொண்டிருக்கும்பொழுது, பாஸ்போர்ட் விசாரணைக்கென்று நம் இஸ்லாமிய பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைக்கிறார்கள், அவர்களை அலைக்களிக்கிறார்கள் அவர்களிடம் பெருந்தொகையையும் வசூலித்து விடுகிறார்கள், இதற்கு ஒரு வழியே பிறக்காதா? என்ற ஆதங்கத்தை நாங்களிருவரும் பரிமாறிக் கொண்டோம்!
ஒரு சில மாதங்கள் கழித்து அந்த நண்பர் தொலைபேசியில், சுல்தான் காக்கா நாம் அன்று பேசிக்கொண்டிருந்த விசியத்தை என் நண்பர் சென்னையில் காவல்துறையில் மிக,மிக பெரிய பதவியில் இருப்பவரிடம் கூறினேன். அவர் சொன்னார் பாஸ்போர்ட் விசாரணை என்ற பெயரில் பெண்களை காவல் நிலையம் அழைத்து விசாரிப்பதற்கு எந்தசட்டமும் இல்ல, காவலர்கள்தான் வீடு தேடி செல்ல வேண்டும். மேலும் அந்த காவலர்கள் ஒரு பைசா கூட வாங்ககூடாது .இதற்கு நேர்மாற்றமாக யாராவது செய்தால் அதை ஆதாரத்துடன் தாருங்கள் உடனே நடவடிக்கை எடுக்கிறேன்.என்றார்.
பூனைக்கு யார் மணிகட்டுவது காக்கா என்றார் என் நண்பர். நானும் அதை ஒப்புக்கொண்டு ஊமையன் கண்ட கனவாக கனத்த இதயத்தில் இந்த செய்தியை எந்திக்கொண்டது தான் மிச்சம். எப்படி மாறிவிட்டது உலகம் . பொங்கள் இனாம் கேட்டு பிடரியை சொரிந்து நிற்பதுபோல் நிற்க வேண்டியவர், கைத்தடியை கையில் ஏந்தாத குறையாக, ஏக அதிகார தோரணையில் பலவந்தமாக பணத்தை பிடிங்கி கொண்டுபோகும் காக்கிகளை கண்டிக்கும் காலம்தான் எப்போது?
காவல்துறை இலஞ்ச ஊழல் பல ஊற்றுக்கண் என்றால் இலஞ்ச ஊழலில் பேரருவி பெருக்கெடுத்து ஓடுவது சார்பு பதிவாளர் பதிப்பகத்தில். அங்குள்ள தூண்களை தட்டினால் கணீரென்ற சத்தம் வராது,“காசுதா“ என்ற ஒலிதான் ஒய்யாரமாய் ஒலிக்கும். இந்த அலுவலகத்தின் அவலத்தைப்பற்றி எழுத ஆரம்பித்தால் எழுத்துக்களின் தூரம் காயல் முதல் காஸ்மீரையும் தாண்டும்!.
வெட்கித்தலைகுனிய வேண்டிய விஷங்களையும், வெள்ளை வெளேரென்ற சட்டையையும், வேஷ்டியையும்,விலை மதிப்புள்ள சேலையையும் கட்டிக்கொண்டு கடுகளவுகூட கூச்சமில்லாமல் கட்டாய வசூல் செய்யும் இவர்களை பார்க்கும்பொழுது இன்னும் இரண்டு கால்களையும் இணைத்து பார்க்கத்தகுதியுடைய இனத்துடையவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!
திருடானாய்ப்பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற புண்ணிய பழமொழி திருட்டுக்கு மட்டுமல்ல இலஞ்சம் கொடுப்பவர் களுக்கும்,வாங்குபவர்களுக்கும் பொருந்தும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross