எனக்கு ஒன்றுமே புரியவில்லை!.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[06 May 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40396
எனக்கு ஒன்றுமே புரியவில்லை!.
இமாலாய ஊழல் புரிந்த ஊழல் குடும்பத்தார்களை ஊருக்குள் நுழைய விடலாமா? என்று மக்களை பார்த்து கேட்ட ஒருவர் அந்த ஊழல் புராணத்தையே பாடி,பாடி ஆட்சியை பிடித்தவர் இன்று கீழ்கோர்ட்டு நீதியரசர்கள் முதல் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் வரை கண்டிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் தண்டிக்கப்பட்டு ஊழல் புரிந்த தண்டனை குற்றவாளியென்று தீர்ப்பாகி தனிமையில் வாழும் ஒரு குற்றவாளியை ,குற்றவாளி என்று சொல்லக்கூடாதாம். ஆனால் ஒரு கோழி கலவாடியவனை கோழிக்கள்ளன் ,கோழிக்கள்ளன் என்று பலித்தால் பரவாயில்லையாம் எப்படியெல்லாம் எலும்பில்லா நாக்கு வளைகிறது பாருங்கள்!
தவறு யார் செய்தாலும் தவறு தவறுதான் இன்று ஊழல் வழக்கு நடந்துகொண்டிருப்பவர்கள் மீது நாளைக்கு அவர்களும் குற்றவாளி என்ற தீர்ப்பை பெற்றால்,அவர்களும் குற்றவாளியே.அதில் எந்த சமரசமும் செய்ய நினைப்பவர்கள் நீத்யும்,நடுநிலயுமற்ற ஒரு சார் சந்தர்ப்பவாதிகள், சுயநல வாதிகள் ஆவார்கள்!
இன்று குற்றவாளி குற்றவாளி என்று கூவுவர்களே ,நாளைக்கு அவர்களுக்கு தீர்ப்பு வரும்வரை பொறுத்திருக்க கூடாதா?,அவர்கள் ஆனத்தமாக உலா வருகிறார்களே அவர்களை பற்றி கொஞ்சங்கூட நினைத்து பார்க்காமல்,
சதி செயலால் குற்றவாளி என்று தீர்ப்பை பெற்றவர்களை சாடுகிறீர்களே இது நியாயமா என்று கேட்கும் கேள்வியின் தரத்தை நினைத்தால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை?
இப்போது நான்கு ஆண்டு தண்டனை பெற்ற குற்றவாளி எந்த ஊழலும் , முறைகேடும் செய்யாத தூமையான ஒருவருக்கு நீதிபதி பொய்யான தீர்ப்பை வழங்கி விட்டாரா? நல்லவர் யார் என்பதைகூட தெரியாமல் பதினெட்டு வருடங்களாக ஒரு சிலரின் சதிவலையில் விழுந்த நீதிபதியின் தீர்ப்பல்லவா இது என்று சொல்ல வருகிறீர்களா?
தண்டனை பெற்ற குற்றவாளி யாராக இருந்தாலும் குற்றவாளியே!
இதில் எள்ளளவும் இசகு, பிசகு மனமுடையவர் எவாராக இருந்தாலும்,
ஒரு எள்ளு முட்டாய் திருடியவனைக்கூட தவறாக பேசுவதற்கு எந்த தகுதியும் திராணியும் இல்லாதவராகிவிடுவார்!.
ஊருக்கு உபதேசதிற்க்கு முன் தம் உள்ளத்தையும் ஒரு கணம் நடுநிலையுடையதுதானா எபதை பார்த்தறிதல் அவசியமே!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross