Re:...லஞ்சமும் ராமாயணமும் posted bymackie noohuthambi (kayalpatnam)[06 May 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 40397
ராமாயணத்திலே கம்பர் ஒரு செய்தி சொல்கிறார்.
''அயோத்தியில் ராமன் ஆட்சி செய்தபோது அங்கு ''உண்மை'' என்பதே இல்லை'' என்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதா, முன்னுக்கு பின் முரணாக இருக்கிறதா...இல்லை அவரே தொடர்கிறார்...''உண்மை'' என்பது ஒன்றில்லை அங்கு ''பொய்மை'' என்று ஒன்றில்லை என்பதால்''.
அந்த நாட்டிலே யாரும் பொய் சொல்வதில்லை, உண்மையை தவிர வேறொரு வார்த்தை அங்கு இல்லை. எந்த விஷயத்துக்கும் நன்மை தீமை அன்பு கோபம் என்பது போல் எதிர் சொற்கள் இருக்கும். இல்லாத ஒன்றுக்கு எப்படி எதிர் சொல் வரும். எனவே உண்மை பொய்மை என்று பிரித்துப் பார்க்க அங்கு வேலையே இல்லை. இது கம்பர் எழுதிய ராமாயண செய்தி.
கற்பனைகளை நாம் ரசிக்கக் கற்றுக்கொண்டுள்ளோம். எனவே அந்த வகையில் நான் லஞ்சம் கொடுத்தேன் i paid abribe .com இணையதளத்தை ரசிக்கலாமே தவிர அதை ருசிக்க முடியாது.அ ங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நிற்கும் லஞ்சத்தை ஒழிக்க புறப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரம் பதவி பெற்றவுடன் அதன் சுவையை அனுபவிக்க தவறியதில்லை.
ஆக, ''இந்தியாவில் லஞ்சம் ஒன்றில்லை இங்கு லஞ்சமே வாங்குபவர்கள் கொடுப்பவர்கள் என்று ஒருவருமில்லை'' என்ற நிலை வரும் காலம் வரும் போது ஒரு புதிய கம்பர் அதை பாட வருவார்.
கம்பரே இந்த லஞ்சத்துக்கு ஆசைப் பட்டார் என்ற செய்தியும் உள்ளது.
சோழ மன்னன் அவையில் ஆஸ்தான கவிஞராக இருந்தார் கம்பர். ஒரு நாள் அவருக்கும் மன்னருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டது. உடனே கம்பர் வெளி ஏறி விட்டார். அப்படி வெளி ஏறியவர் சும்மா போக வில்லை. ''வல்லவனும் நீயோ வளநாடும் உன்னதோ, உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்தன் உண்டோ - உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு'' என்று பாடி விட்டுதான் போனார்.
மனஸ்தாபம் எதில் என்பது தான் இங்கே கேள்வி....வேறென்னவாக இருக்க முடியும்.... பணம்... பணம்... பணம்,,,...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross