செய்தி: மே 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 69 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது! தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[01 July 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41200
காயல்பட்டினம் நகராட்சி ஆணையரால் இதுவரை 2015-16 ம் ஆண்டிற்கான (உத்தேச வரவு - செலவு அறிக்கை) பட்ஜெட் தயார் செய்து நகர்மன்ற தலைவருக்கோ..! நகர்மன்றத்தின் 18 உறுப்பினர்களுக்கோ..! வழங்க படவில்லை என அறிகிறேன், ஆனால் தமிழக அரசோ 2015 - 2016 நிதியாண்டுக்கு, காயல்பட்டினம் நகராட்சிக்கு மானியமாக 69 லட்சம் ரூபாய் வழங்கியுள்ள தகவல் பாராட்டுக்குரியது,..!
நமது நகராட்சியின் ஆணையர் திரு, காந்திராஜ் நமது வரி பணம் குறித்த உண்மையான பல வரவு - செலவு தகவல்களை மறைத்து பொய்யான / முரண்பாடான வரவு - செலவு அறிக்கையை சமீபத்தில் தலைவரிடம் அளித்தாராம்..!
அதில் உதாரணமாக, மாநில நிதிக்குழு மானியம் (SFC) வகை வரவு 80 லட்சம் என குறிப்பிட்டுள்ளாராம். ஆனால் - நகர்மன்ற தலைவர் கூறுகிறார் இவ்வகை வருவாய் 3 கோடி ரூபாய்க்கும் மேல், ஒவ்வொரு ஆண்டும் நமது நகராட்சிக்கு வருகிறதாம் - ஆணையர் தவறான தகவல் காட்ட காரனமேன்னே..?
மேலும் ஆணையர் காந்திராஜ் அளித்த முரண்பாடான தகவல் என்னவெனில்.. காலிமனை வரி மூலம் நமது நகராட்சிக்கு வருவாய் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளாராம்...! ஆனால் - புதிய கட்டுமான உரிமங்கள் கொடுக்கும்போது, காலி மனை வரி - நமது நகராட்சியில் வசூல் செய்யப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆணையர் தவறான தகவல் காட்ட காரனமேன்னே..?
மேலும் - இதே ஆணையர் திரு காந்திராஜனின் ஒரு வியப்புக்குரிய அதாவது இது வரையில் நகர்மக்கள் எவரும் கேள்வி படாத செலவீன தகவல் இதோ..! நம் நகரின் குடிசை பகுதிகள் பராமரிப்புக்கு என ஆண்டுக்கு 45 லட்சம் என்றும், நம் நகரின் பூங்கா பராமரிப்புக்கு 75 லட்சம் என்றும் - நமது நகராட்சிக்கு சம்பந்தமே இல்லாத முரண்பாடான செலவு தகவலை நகர்மன்ற தலைவரிடம் அளித்தாராம். (குறிப்பு:- கடந்த மழை காலத்தில் ஏழை எளிய மக்களின் குடிசைகள் முற்றிலும் சேதமடைந்த போது நகரின் சமுதாய கட்சியான முஸ்லீம் லீக்கை சார்ந்த சகோதரர்கள் பெரும் தொகை வழங்கி உதவிகள் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) இதில் ஆணையர் குறிப்பிடும் நகராட்சியின் உதவி தொகை யாருக்கு சென்றது..? நமது வரிபணத்தை நகராட்சி மூலம் ஆணையர் திரு காந்திராஜ் குடிசைகளுக்கு வழங்கிய உதவி தொகை குறித்த பட்டியலை நகர்மன்ற கூட்டத்தில் சமர்பிக்க முன் வருவாரா..? அல்லது.. நகர்மன்ற உறுப்பினர்கள் ஆணையரிடம் இது குறித்து கேள்விதான் எழுப்புவார்களா..!
அடுத்து ஆணையர் திரு காந்திராஜனின் மிக பெரிய திகைப்பூட்டும் தகவல் இதோ..! நம் நகரின் பூங்கா பராமரிப்புக்கு என 75 லட்சம் செலவு செலவீனங்களை காண்பித்துள்ளாராம்..! நம் நகரில் நமது நகராட்சியால் இவ்வளவு பெரிய தொகை (75 லட்சம்) செலவிடும் அந்த பூங்கா எந்த பகுதியில் அமைந்துள்ளது குறித்த விபரத்தை மன்ற கூட்டத்தில் சமர்பிக்க முன் வருவாரா..? அல்லது.. நகர்மன்ற உறுப்பினர்கள் ஆணையரிடம் இது குறித்து கேள்விதான் எழுப்புவார்களா..! ஆணையர் தவறான தகவல் காட்ட காரனமேன்னே..?
மேலும் நகராட்சியின் நிதி நிலை அறிந்திட நகராட்சி பெயரில் எத்தனை வங்கி கணக்குகள் உள்ளது - அது எந்த எந்த வங்கிகளில் / ஊர்களில் தொடங்கப்பட்டு (நம் வரி பணத்தின் வரவு - செலவு) செயல்பட்டு வருகிறது என்ற விபரத்தை ஆணையர் திரு. காந்திராஜ் மன்ற கூட்டத்தில் சமர்பிக்க முன் வருவாரா..? அல்லது.. நகர்மன்ற உறுப்பினர்கள் ஆணையரிடம் இது குறித்து கேள்விதான் எழுப்புவார்களா..! ஆணையர் தவறான தகவல் காட்ட காரனமேன்னே..?
நகராட்சிக்கு வாங்கபடாத கணினிக்கு முன்னாள் ஒப்பந்த தொழிலாளர் நசீர் கான் என்பவர் பெயரில் 1,18,000 க்கு காசோலை என மேலும் பல முறைகேடுகள் நடந்த வண்ணம் உள்ளது.
இது குறித்து நியாயமான கேள்விகள் நகரின் சமூக ஆர்வலர்களின் / பொது நல அமைப்புக்களின் பார்வை நகராட்சியை நோக்கி அமையா வரை இது போன்ற கீழ்த்தரமான, கேவலமான, சுயமரியாதையற்ற அவலம் தொடரத்தான் செய்யும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross