S .K .சாலிஹ் சிறப்புமிகு சிந்தனைப்பேழை ! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[01 July 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 41201
வளைகுடா நாட்டில் காரை ஓட்டிக்கொண்டு வெளியூர் செல்லும் பொழுது வாகன சோதனைசாவடி(check point )யை நெருங்கும் பொழுது உடனே நாம் சீட்பெல்டை மாட்டுவது மட்டுமல்ல மற்றவர்களையும் மாட்ட சொல்கிறோம். ஏன்? பயம்,அபராதம் அசிங்கம் ஆகிய தண்டனையில் இருந்து தப்பிக்க,
அந்த சோதனை சாவடி தாண்டிய பிறகு அந்த சீட்பெல்டை அசால்ட்டாக தளர்த்திவிட்டுக்கொண்டே சுவராசியமாக நம் கதைகளை பேசிக்கொண்டே பயணம் செய்கிறோம்!
ஒரு குறிப்பிட்ட தூரம்வரை சென்ற நம் வாகனம் நாம் சென்று கொண்டிருக்கும் சாலையில் வேறொரு வாகனம் குப்பற விழுந்து கிடப்பதை காண முடிகிறது.அதை பார்த்த நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது .அந்த வாகனத்தில் பயணம் செய்தவர்களில் இருவர் வெளியே தூக்கி எறியப்பட்டு மரணித்தும் விட்டாரகள்!
அந்த விபத்து இடத்தில் சிலர்கூடி உதவி செய்வதில் முனைந்திருந்த அந்த வேலையில் அங்கிருந்து கேட்டகுரல், இந்த இரண்டுபேரும் சீட்பெல்ட்டை மாட்டியிருந்தால் இவர்கள் மரணித்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்!
நம்முடைய நலமான,பாதுகாப்பான வாழ்வு என்ற வழிநெறி முறையை நம் புண்ணிய இஸ்லாம் மார்க்கம் மிகத் தெளிவாக நமக்கு தந்திருக்கிறது. அதுதான் "சீட் பெல்ட்" என்பது அதையணிந்து இவ்வுலக வாழ்வு என்ற பயணத்தில் பாதுகாப்பாக செல்வது ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமையாகும்!
இதில் அசால்ட்டாக இருக்கும் அதிகமானோருக்கு சோதனை சாவடி என்ற இடத்திற்குறிய நேரமான புனித ரமலான் நோன்பு காலம் வருகிறது, அந்த காலத்தில் மட்டும் பயந்து "சீட்பெல்ட்" போடுபவர்கள், அந்த மாதம் முடிந்தவுடன் அந்த பாதுகாப்பு கருவியை தொடர்ந்து உபயோகிப்பது இல்லை.அப்படி பின்பற்றா தவர்களின் முடிவு வழியில் விபத்தில் சிக்குண்டவர்களின் பரிதாப நிலையைத்தான் வாழ்வில் பெறவேண்டியது வரும் என்ற மிகப்பெரிய மார்க்க உத்தம உண்மையை மிக சிம்பாலிக்காக என் அன்பு மருமகன் S.K சாலிஹ் கூறியுள்ளார்!
அருமை மருமகன் S .K .சாலிஹ் அவர்கள் இதுபோன்ற பயனுள்ள கருத்துக்களை பீரிட்டு பாயச்செய்யும் சிந்தனை ஊற்றறிவின் அமுத சுரபியல்லாவா? நாம் எல்லோரும் சேர்ந்து எப்படி அள்ளினாலும் அன்றே அடுத்த கணமே அப்படியே ஊறிவிடும் மறுபடியும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross