ஒன்னுமே புரியல posted byMuhammadh Abubacker (Muscat)[29 July 2015] IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 41457
தலைவி கை சுத்தமானவர், தவறான வழியில் பொது பணம் செலவிட அனுமதிக்கமாட்டார் என்பது பெரும்பான்மை காயல்வாசிகள் ஏற்றுக்கொள்ளும் கருத்து. அவரின் பதவி காலமும் ஓரிரு ஆண்டுகளில் முடிந்து விடும் என்று நினைக்குறேன்.
நம் மக்கள் பொதுவாக, நியாயமான ஒருவர் பதவியில் இருக்கும்போது அவருக்கு உரிய ஆதரவு, பாதுகாப்பு, அதிகாரங்களை கொடுக்க மாட்டார்கள். அவரின் பதவி காலம் முடிந்தபின் நல்லவர், நியாயமானவர், நல்லவர், வல்லவர் என்றெல்லாம் சொல்வார்கள்.
எல்லாரும் நல்லது செய்வதாக சொல்கிறார்கள், ஆனால் இது வரையில் பெரிதாக நகராட்சியின் பணிகள் நடந்ததாக தெரியவில்லை.
தலைவி பதவிக்கு வந்து சில நாட்கள் கழிந்தபின், நமது ஊரின் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் மாநில பொது செயலாளர் கூட, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையின் கீழ் ஊரின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு உறுப்பினர்கள் சேர்ந்து செயல்பட வேண்டும் போன்ற கருத்துக்களை சொல்லி இருந்தார்.
எல்லாரும் தான் செய்வது மட்டுமே சரி என்ற மனநிலையில் இருக்கும்போது யாருக்குப் போய், யார் அறிவுரை சொல்ல, அப்படி சொன்னாலும் யாரும் கேட்பதற்கு தயாராகவும் இல்லை.
ஐக்கிய பேரவை என்ற ஓர் அமைப்பு தேர்தல் நேரங்களில் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் இவர்களுக்கு ஓட்டுபோடுங்கள் என்று சொல்பவர்கள் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்களா என்று தெரியவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross