Re:...HUBBUL WATHANI MINAL EEMAAN posted bymackie noohuthambi (kayalpatnam)[16 August 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41657
எந்த நாடு என்ற கேள்வி இல்லை எந்த ஜாதி என்ற பேதம் இல்லை. காயலர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் அவர்கள் இந்தியர்கள் என்ற உணர்வோடு இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நமது ஊருக்கு பெருமை சேர்க்கிறார்கள். ஆனால் அவர்கள் பிறந்த மண்ணில் இந்த விழாக்கள் நடக்கும்போது கோஷ்டிகளாக செயல்பட்டு நமதூரின் பெருமைக்கு களங்கம் சேர்க்கிறார்கள்.
ஐந்து விரல்கள் சேர்ந்து அணைக்கும்போது மயிலிறகுபோல் வருடும் இதமான சூழ்நிலை உருவாகிறது. அதே ஐந்து விரல்கள் சேர்ந்து அடிக்கும்போது கொதிநிலை உருவாகிறது. இது எங்கே இருந்து வருகிறது?
உள்ளம்
அதை ஒரு ஸ்டோர் ரூம் போல் நாம் ஆக்கிவைத்து பழையசமான்களை அடைத்து வைப்பது போல் கடந்தகால கசப்பான நிகழ்வுகளை காலம்காலமாக அதில் போட்டு அடைத்து வைக்கிறோம். அவ்வப்போது அதை திறந்து பார்த்து அதன் நாற்றத்தையும் ரசிக்கிறோம். போகி பண்டிகை என்று இந்துக்கள் பொங்கலுக்கு முதல்நாள் கொண்டாடுவார்களே, பழைய சாமான்களை தேவை இல்லாத பொருள்களை வெளியே கொண்டுவந்து தீயிட்டு கொளுத்துவார்களே அப்படியாவது ஒரு நாளை நாம் தேர்ந்தெடுத்து தனிமையில் உட்கார்ந்து அந்த தீய எண்ணங்களை வெளியே தள்ளி விட்டு உறவுகளை புதுப்பித்துக் கொள்கிறோமா என்றால் அதுவும் இல்லை.
நபிகள் நாயகம் வெற்றி திருமகனாக மக்காவுக்குள் நுழைந்தவுடன் அவர்கள் செய்த முதல் வேலை கௌபதுல்லாவின் சாவி இதுவரை யார் கையில் இருந்ததோ அவரை கூப்பிட்டு அவர் கையில் அதை மீண்டும் ஒப்படைத்ததாகவும் அதைக் கண்டு நெகிழ்ந்த அந்த மனிதர் நபியின் இருகரம் பற்றி ஓரிறை கொள்கையில் தன்னை இணைத்துக் கொண்டார்கள் என்ற ஹதீது நம்மில் எல்லோருக்கும் தெரியும். ஹுதைபிய்யா உடன்படிக்கை பற்றி வாய் நிறைய பேசுகிறோம் வாய் பிளந்து சுபுஹானல்லாஹ் சொல்கிறோம் நம்மில் எத்தனை பேர் அந்த பண்புகளை நமது வாக்கையில் கடை பிடிக்கிறோம். இந்த சுதந்திர நாள் சிந்தனையாக இதை எல்லாம் இங்கு பதிவு செய்கிறேன்.
அடிபட்டு உதைபட்டு சித்திரவதைப்பட்டு தூக்கு கயிற்றில் தொங்கி இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்க பாடுபட்டவர்கள் போன பிறகு சுதந்திரம் ஆகஸ்ட் 15இல் தருகிறோம் என்று சொன்னபோது அன்று அஷ்டமி நாள் - நாள் சரியில்லை என்று சொன்னவர்கள் வாழும் நாடு இது. ஆகஸ்ட் அது எட்டாவது மாதம் எட்டு நல்ல நம்பர் இல்லை என்று சொன்னவர்கள் வாழும் நாடும் இதுதான் . அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் அய்யாமுல் ஜாஹிலிய்யாத் காலத்தில் வாழ்கிறோமா அறிவியல் நிறைந்த காலத்தில் மீண்டும் ஒரு அய்யாமுல் ஜாஹிலிய்யத்தை நோக்கி நாம் வெகு வேகமாக சென்று கொண்டிருக்கிறோமா...
தாய்நாட்டு பற்று ஈமானில் பாதி என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross