இந்தியாவின் 69ஆவது சுதந்திர நாள் ஆகஸ்ட் 15 அன்று (நேற்று) நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி, சஊதி அரபிய்யாவின் துறைமுக நகரான ஜித்தாவிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர நாள் விழா காலை 09.00 மணியளவில் கொண்டாடப்பட்டது.
சஊதி அரபிய்யா நாட்டிற்கான இந்திய துணைத்தூதர் பி.எஸ்.முபாரக், இந்திய தேசிய கொடியேற்றி, சுதந்திர நாள் உரையாற்றியதோடு, இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர நாள் வாழ்த்துச் செய்தியையும் வாசித்தார்.
இவ்விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட தமிழர்களும், இதர இந்தியர்களும் பங்கேற்றதோடு, நிறைவில் இந்திய துணைத் தூதரைச் சந்தித்து, தமது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
விழா நிறைவில், பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு - கார சிற்றுண்டியும், பனிக்கூழ், கேக், குளிர்பானம், தேனீர் உள்ளிட்டவையும் பரிமாறப்பட்டன.
இந்திய துணைத் தூதர் எம்.எஸ்.முபாரக் - தமிழ்நாடு நாகர்கோவிலைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
ஜித்தாவிலிருந்து...
சட்னி S.A.K.செய்யித் மீரான்
கடந்தாண்டு (2014) ஜித்தாவிலுள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |