தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, மாவட்டம் முழுக்க - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், திடீர் சோதனைகளும் பரவலாக நடத்தப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், 13.08.2015 அன்று - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் திடீர் சோதனை - நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் தலைமையில், நகரிலுள்ள வணிக நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டது. 48 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் நிறைவில் 8 கடைகளில் 6.5 கிலோ - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அவர்களுக்கு மொத்தம் ஆயிரத்து இருநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. |