இந்தியாவின் 69ஆவது சுதந்திர தினம் 15.08.2015 அன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் சென்ட்ரல் துவக்கப்பள்ளியில், அன்று காலை 08.45 மணியளவில் சுதந்திர நாள் விழா, வாவு எம்.ஏ.எஸ்.ஷாஹுல் ஹமீத் தலைமையில் நடைபெற்றது.
சென்ட்ரல் பள்ளிகளின் தாளாளர் வாவு எம்.எம்.மஸ்னவீ, செயலாளர் ஏ.எச்.நெய்னா ஸாஹிப், வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை), கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, எம்.எல்.ஷேக்னா லெப்பை, எம்.ஏ.அப்துல் ஹக், வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், என்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன், வாவு எம்.எம்.உவைஸ், வி.ஐ.ஜெய்னுல் ஆப்தீன், எம்.டீ.ஜாஃபர் ஸாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் ஹாஃபிழ் எஸ்.எம்.பி.முத்து அஹ்மத் அர்ஷத் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் இறைவணக்கப் பாடல் பாடினர்.
தலைமையாசிரியர் எஸ்.பாபு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தேசிய கொடியேற்ற, மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பள்ளி மாணவர்கள் கொடி வாழ்த்துப் பாடல் பாடினர். எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ சிறப்புரையாற்றினார்.
ஆசிரியர் ஏ.ஏ.பீர் முஹம்மத் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், சென்ட்ரல் மேனிலை மற்றும் துவக்கப்பள்ளிகளின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
அ.பீர் முஹம்மத் ஹுஸைன்
படங்கள்:
தா.நியாஸ்
(ஆசிரியர்கள், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி)
சென்ட்ரல் துவக்கப்பள்ளி சார்பில் கடந்தாண்டு (2014) நடைபெற்ற சுதந்திர நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சென்ட்ரல் துவக்கப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |