இந்தியன் ஃபாடர்னிட்டி ஃபோரம் அமைப்பின் காயல்பட்டினம் நகர அங்கத்தினர் சார்பில், இன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் பிரதான வீதியில் - ஹாஜியப்பா தைக்கா பள்ளி எதிரிலுள்ள துஃபைல் காம்ப்ளக்ஸ் கேரளங்கில், ஹஜ் பயண பாதுகாப்பு வழிகாட்டு சிறப்பு முகாம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காயல்பட்டினம் நகர செயலாளர் அஷ்ரஃப் தலைமையில் நடத்தப்பட்டது.
ஹஜ் பயணத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு ஒழுங்கு முறைகள், சஊதி அரபிய்யா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விளக்கங்களை, இந்தியன் ஃபாடர்னிட்டி ஃபோரம் அமைப்பைச் சேர்ந்த அப்துல் காதிர், அதன் பயிற்சியாளர் ஷேக் அப்துல்லாஹ் ஆகியோர் இம்முகாமில் அசைபட விளக்கத்துடன் அளித்தனர்.
இம்முகாமில், நடப்பாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள - காயல்பட்டினம் நகரைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஹஜ் பயணியர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, ஷம்சுத்தீன் ஒருங்கிணைப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஷம்சுத்தீன்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |